tamilnadu

கணவன்-மனைவி சடலமாக மீட்பு

சின்னாளபட்டி, ஜூலை 1- திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காந்தி நகரைச் சேர்ந்தவர் மகுடீஸ்வரன் (51). இவரது மனைவி சிவகாமி இவர் களுக்கு காயத்ரி என்ற மகள் உள்ளார் காயத்ரிக்கு திருமணம் முடிந்துவிட்டது. புதனன்று காயத்ரி தன் தாய் தந்தையரை பார்ப்பதற்காக வந்து வீட்டின் கதவை தட்டி யுள்ளார் வெகுநேரமாக கதவு திறக்காத தால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வத்த லக்குண்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் கதவை உடைத்து உள்ளே சென்ற காவல்துறையினர் பார்த்தபோது மகுடீஸ்வரன் சிவகாமியும் படுக்கையில் இறந்து கிடந்தனர். இருவரது உடலையும் மீட்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.