திண்டுக்கல் மாவட்டம் விருப்பாட்சியை ஆண்ட பாளையக்காரர் கோபால் நாயக்கர். வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டதால் தூக்கிலிடப்பட்டார். அவரது 219-வது நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. வாலிபர் சங்க மாநிலத் துணைச்செயலாளர் பாலச்சந்திரபோஸ், மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பாலாஜி, பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி. மாவட்டக்குழு உறுப்பினர் ஆனந்த், ஒட்டன்சத்திரம் ஒன்றிய நிர்வாகிகள் வெங்கடேஷ், மணிமுத்து, லோகேஷ், ஆகியோர் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.