சின்னாளபட்டி, ஜூன் 4- தில்லி திகார் ஜெயிலில் இருந்து தனது சொந்த ஊரான சின்னாளபட்டிக்கு திரும் பிய காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சின்னாள பட்டி பைபாஸ் காலனியை சேர்ந்த 28 வயது வாலிபர் தில்லி திகார் ஜெயி லில் காவலராக வேலை பார்த்துவரு கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விமானம் மூலம் சொந்த ஊர் திரும்பி னார். கொரோனா பரிசோதனையில் அவ ருக்கு தொற்றிருப்பது உறுதிசெய்யப் பட்டது. இதையடுத்து அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார். மஹாராஷ்டிராவில் மாநில புனேவில் உள்ள ஐடி கம்பெனியில் பணியாற்றி வந்த ஊழியர் வயது (30) ,அவரது மனைவி (வயது 24) கர்ப்பிணி பெண்மணி மற்றும் அந்த நபரின் தந்தை (வயது 60) உட்பட 3 பேரும் மும்பையில் இருந்து கோயம் புத்தூருக்கு விமானத்தில் வந்தனர்.பிறகு அங்கிருந்து வாடகை கார் மூலம் தனது சொந்த ஊரான புனேவில் உள்ள ஐடி கம்பெனியில் பணியாற்றி வந்த ஊழியர் 30 வயது ஆண், அவரது மனைவி (வயது 24), கர்ப்பிணிப் பெண், அவரது தந்தை (வயது 60) ஆகியோர் திண்டுக்கல் மாவட் டம்செந்துறை- சின்னக்குளம் பகுதிக்கு வந்தனர். இதையடுத்து உலுப்பகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த மாதிரி கள் பரிசோதனை செய்யபட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.