தருமபுரி, ஜூன் 22- வத்தல்மலையில் உள்ள கிராமத்துக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என அப் பகுதி பழங்குடி மக்கள் மாவட்ட நிர்வா கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரியில் இருந்து 31 கி.மீ. தொலை வில் வத்தல்மலை உள்ளது. வனப் பகு தியை ஒட்டியுள்ள இந்த மலையில் பால் சிலம்பு, பெரியூர், சின்னான்காடு, நாய்க்க னூர் உள்ளிட்ட 10 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 5 ஆயிரத்திக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். கடல் மட்டத்திலிருந்து வத் தல்மலை 1,100 மீட்டர் உயரத்தில் இருப்ப தால். இந்த மலைப் பகுதியில் தட்பவெட்ப நிலை குளிர்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், இந்தப் பகுதியில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இதுதவிர, ராகி, கேழ் வரகு, காப்பி, மிளகு, தேக்கு, சவுக்கு போன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன. பப்பாளி, கொய்யா, பலா போன்ற கனிகளும் விளை விக்கப்படுகின்றன. மேலும், கடந்த 2012 ஆம் ஆண்டு வத்தமலையை தமிழக அரசு சுற்றுலா தலமாக அறிவித்தது. கடந்த 6 ஆண்டுக ளுக்கு முன் வத்தல்மலைக்கு புதியதாக தார்சாலை அமைக்கப்பட்டது. இங்கு வாழும் பழங்குடி மக்கள் தங்களது தேவைக்கும் வெளியூர் செல்ல தருமபு ரிக்குதான் வரவேண்டும். வத்தல்மலையில் இருந்து தருமபுரிக்குவர மினிடோர், ஷேர் ஆட்டோ, கார் ஆகியவற்றின் மூலம்தான் வர வேண்டும். வத்தல்மலையில் இருந்து தருமபுரிக்கு வர ஒருநபருக்கு ரூ.60 வசூல் செய்யப்படுகிறது. ஒருநபர் வந்து செல்ல ரூ.120 செலவு செய்கின்றனர். மேலும், விவசாய பொருட்கள் உள் ளிட்ட சுமைகளை எடுத்துசென்றால் கூடு தல் செலவு ஏற்படுகிறது. இதனால் பழங்குடி மக்கள் சிரமத்திற்குள்ளாகின்ற னர். அரசு பேருந்து மூலம் பயணம் செய்தால் செலவு மிகவும் குறைவாக இருக்கும். எனவே பழங்குடி மக்களின் நலன் கருதி இவர்களின் பொருளாதா ரத்தை மேம்படுத்த வத்தல்மலைக்கும் தருமபுரிக்கும் அரசு பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி பழங்குடி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.