tamilnadu

கழிவுநீர் கால்வாய் அமைத்து சுகாதாரத்தை காத்திடுக பொதுமக்கள் கோரிக்கை

தருமபுரி, ஆக. 6- நல்லூர் ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து சுகாதாரத்தைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.  தருமபுரி மாவட்டம், நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட  சென்னப்பன்கொட்டாய் கிராமத்தில் 200க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிரா மத்தில் போதிய கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாத தால் பல மாதமாக வீட்டுக் கழிவுநீரானது நடைபாதை யில் வழிந்து ஓடுகிறது.

இந்நிலையில், தற்போது பருவமழை தொடங்கியதால் மழைநீரும், கழுவுநீரும் கலந்து ஆங்காங்கே குட்டை போல் தேங்கி நிற்கி றது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவது மட்டு மின்றி, டெங்கு கொசு உற்பத்தியாகவும் வாய்ப்புகள் உள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகித்திடமும், வட் டார வளர்ச்சி அலுவலரிடமும் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.  எனவே, கழிவு நீர் கால்வாய் அமைத்து சுகாதாரத் தைக் காக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அக்கிராமக்கள் வலி யுறுத்தியுள்ளனர்.

;