tamilnadu

img

தேசிய குடியுரிமை திருத்தச்சட்டத்தை வாபஸ் பெறுக சமூக நல்லிணக்க மேடை வலியுறுத்தல்

தருமபுரி, ஜன.16- குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற சமூக நல்லிணக்க மேடை வலியுறுத்தியுள்ளது.சமூக  நல்லிணக்கமேடையின் மாவட்ட  ஆலோசனைக் கூட்டம் வியாழ னன்று தருமபுரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடை பெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஈ.பி.பெருமாள் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார், திமுக  இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பொன்.மகேஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் ஒய்.சாதிக் பாஷா, செயலாளர் தென்றல் யாசின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர் வாகிகள் அன்வர் பாஷா, நிஜாமுதீன்,  எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் மு. ஜாவித், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சோ.அருச்சுனன், விவசாய தொழிலாளர் சங்க  மாவட்ட செயலாளர்  எம்.முத்து, மாதர் சங்க  மாவட்ட செயலாளர்  எஸ்.கிரைசா மேரி, ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த், தவ்ஹித் ஜமாத் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். இக்கூட்டத்தில் ஜனவரி 20 ஆம்  தேதி சமூக நல்லிணக்க மேடை சார்பில் தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி தருமபுரியில் கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என  முடிவெடுக்கப்பட்டது. மதச்சார்பற்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ள முற்போக்கு சக்திகளும்,  சிறுபான்மை அமைப்பினரும், அனைத்து அரசியல் கட்சிகளும்   திரளாக கலந்துகொள்ள வேண்டு மென சமூக நல்லிணக்க மேடை அழைப்பு விடுத்துள்ளது.

;