tamilnadu

img

தரமற்ற உணவுப்பொருள் விற்பனை-அபராதம் உணவுப்பாதுகாப்பு அலுவலர் நடவடிக்கை

தருமபுரி, ஜன.  28- தருமபுரியில் தடை செய்யப் பட்ட பொருள்கள் விற்பனை செய் தோர் மற்றும் விதிகளை மீறியோ ருக்கு உணவுப்பாதுகாப்பு துறையி னர் அபராதம் விதித்தனர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி உத்தரவின் பேரில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை  நியமன அலுவலர் டாக்டர்.ஏ.பானு சுஜாதா  மற்றும் தருமபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கே.நந்தகோபால் உள் ளிட்ட குழுவினர் தருமபுரி பேருந்து நிலையம், பென்னாகரம் சாலை மற்றும் சத்திரம் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்டி கடைகள், பீடா கடைகள், பலகார கடைகள், குளிர்பான நிலையங்கள் மற்றும் உணவகங்கள் ஆகியவற்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் தடை செய்யப்பட்ட புகை யிலை பொருள்கள் விற்ற இரு கடைகளுக்கு தலா ரூ.5ஆயிரம் வீதம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக் கப்பட்டது. மேலும் அச்சிடப்பட்ட பழைய செய்தி தாள்களில் எண் ணெய் பலகாரங்கள், உணவு பொருள்கள் விநியோகம் செய்த நான்கு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. உணவு பாது காப்பு விதிகள்படி உரிய லேபிள் நடைமுறையைப் பின்பற்றாத விற்பனையாளர்கள் மூவருக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.3 ஆயிரம் என ஒரே நாளில் ரூ.21ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும்,  பதிவு சான்றிதழைப் புதுப்பிக்காத கடைகளுக்கு உடன் விண்ணப் பிக்க நோட்டீஸ் அளிக்கப்பட் டது. ஏழு தினங்களுக்கு விண்ணப் பிக்காத பட்சத்தில் அபராதம் ரூ.5 ஆயிரம் விதிக்கப்படும் என எச்ச ரிக்கை விடுக்கப்பட்டது.  இதேபோல் காலாவதியான குளிர்பானங்கள், தரமற்ற இனிப்பு கள், தின்பண்டங்கள் மற்றும் செயற்கை நிறமேற்றிய கோழி இறைச்சி (2கிலோ), தடை செய் யப்பட்ட புகையிலை பொருள்கள், நெகிழிகள் என ரூ.5ஆயிரம் மதிப்பி லான பொருள்கள் பறிமுதல் செய் யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும்,உணவகங்களில் உண வுப் பொருள்கள் சுகாதாரமாகவும், உரிய பாதுகாப்பு பெட்டகம் மற்றும்  நிழற்குடைகள் அமைத்தும் பணி யாளர்கள் உரிய கவச உடைக ளான தலையுறை, எப்ரான் மற்றும்  கையுறைகள் அணிந்து இருக்க வேண்டும். தேவையற்ற செயற்கை  நிறமிகளான கலர்பவுடர்களை உள்ளிட்டவற்றில் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். சமையல்  எண்ணெய் பலமுறை பயன்படுத்தா மலும்  மூலப்பொருள்கள் உரிய  முறையில் உள்ளதா எனவும் உரிய கலன்களில் மூடியிட்டு பயன்படுத்தி டவும் விற்பனை செய்யும் இடம், சுற்றுப்புறம் சுகாதாரமாகவும் இருக்க அறிவுரை வழங்கினர். மேலும் ஆடு , கோழி இறைச்சி கடை களும் சுகாதாரமான முறையில் விற்பனை செய்யவும், தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் தவிர்க்கவும், கழிவு பொருள்களை முறையாக அப்புறப்படுத்தி உரிய முறையில் அதற்கான இடத்தில் கொட்ட வேண்டும் என மாவட்ட  நியமன அலுவலர் அறிவுறுத்தியுள் ளார்.

;