tamilnadu

img

ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பால் 5 கோடி இளைஞர்கள் வேலையிழப்பு கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் குற்றச்சாட்டு

தருமபுரி , ஏப்.10-மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி விதிப்பு, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் 5 கோடி இளைஞர்கள் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கொங்கு நாடு மக்கள் தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர்ஈ.ஆர்.ஈஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார், சட்டமன்ற இடைத்தேர்தல் அரூர் தொகுதி செ.கிருஷ்ணகுமார், பாப்பிரெட்டிபட்டி தொகுதி ஆ.மணி ஆகியோரைஆதரித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் அரூர் மற்றும் பாப்பிரெட்டிபட்டியில் பிரச்சாரபொதுக்கூட்டம் நடைபெற்றது. அரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் செந்தில் முருகன் தலைமை வகித்தார். கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் சிறப்புரையாற்றினர்.அப்போது அவர் பேசியதாவது, மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில்ஜிஎஸ்டிவரி விதிப்பு கொண்டுவரப்பட்டது. இதனால் இந்த சிறு தொழில்கள் மூடப்பட்டதால், சுமார் 5 கோடி இளைஞர்கள்வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர். மத்திய அரசு எந்தவிதமான புதிய தொழிற்சாலைகளையும்ஏற்படுத்தவில்லை.இதேபோல், ரூ.500 மற்றும்ரூ.1000 பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஒட்டுமொத்த இந்திய மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மஞ்சள், மரவள்ளி கிழங்குகள் உள்ளிட்ட எந்த விவசாய விளை பொருள்களுக்கும் உரிய விலை இல்லை. விவசாயம்முற்றிலும் அழியும் நிலை உருவாகியுள்ளது. எனவே, இந்தியாவில் பாஜக தலைமையில் மீண்டும் ஆட்சி அமையக் கூடாது. அதேபோல், தற்போது நடைபெறும் இடைத் தேர்தலால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். எனவே, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து, கட்சி வேறுபாடின்றி திமுக கூட்டணியை வெற்றிப் பெறச் செய்வதை மட்டுமே இலக்காக கொண்டு தேர்தல் களப் பணியாற்ற வேண்டும் என்றார்.இதில், கொமதேக கொள்கை பரப்பு செயலாளர் ஜி.அசோகன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

;