tamilnadu

img

தென்கரைகோட்டை ஏரிக்கு தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்

தருமபுரி, ஜன.9- பாப்பிரெட்டிப்பட்டி அணையிலிருந்து கால்வாய் மூலமாக ஏரிக்கு தண்ணீர் நிரப்ப  வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் தென்கரைகோட்டையில்  சாலை மறியலில்  ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டி அருகே உள்ள தென்கரைக்கோட்டை ஏரி சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட தாகும். இப்பகுதியில்  போதிய அளவு மழை  பெய்யாததால் ஏரி வறண்டு காணப்படு கிறது. வாணியாறு அணையில் இருந்து தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டு பழைய ஆயக்காட்டு பகுதிகளான வெங்க டசமுத்திரம், ஆலாபுரம், ஓந்தியாம்பட்டி ஆகிய ஏரிகளுக்கு தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. இந்த நிலையில் வியாழனன்று  பறையப்பட்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விட முயற்சி நடந்தது. இந்த தகவலறிந்த  தென்கரைக்கோட்டை ஊர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சாலை மறியலில் ஈடு பட்டனர்.  இதையடுத்து கோபிநாதம்பட்டி போலீ சார், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் இளஞ்செழியன், கடத்தூர் வட்டார வளர்ச்சி  அலுவலர்  கணேசன், மண்டல துணை  வட்டார வளர்ச்சி அலுவலர் கோபிநாத், பொதுப்பணித்துறை உதவி செயற் பொறி யாளர் பரிமளா, துணை வட்டாட்சியர் மகேஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.  இப்பேச்சுவார்த்தையில் இரு நாட்களில் தென்கரை கோட்டை ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என  அதிகாரிகள் உறுதியளித்தனர்.  இதை யடுத்து பொதுமக்கள், விவசாயிகள் கலைந்து சென்றனர். 

;