tamilnadu

img

சிமெண்ட் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

தருமபுரி,டிச.13- மருளுக்காரன்கொட் டாயில் பழுதடைந்த சிமெண்ட் சாலையை சீர மைக்க வேண்டுமென அப் பகுதி மக்கள் வலியுறுத்தி யுள்ளனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்திற் குட்பட்ட மருளுக்காரன் கொட்டா பகுதியில்100க்கு மேற் பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  இப்பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்டுசாலை அமைக்கப்பட்டது.  ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்காக சிமெண்ட் சாலையின் நடுவில் குழாய்  பதிப்பதற்கு சாலை உடைக்கப்பட்டது.  இந்நிலையில் உடைக்கப்பட்ட சாலையை பல மாதங்களாகியும் சீரமைக் கப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.