தருமபுரி. மே 6-குடிநீர் கேட்டு அதிகாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட செங்காட்டுபுதூர் பொதுமக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.தருமபுரி மாவட்டம், பாப்பகரெட்டிபட்டி வட்டம், அதிகாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட, செங்காட்டுபுதூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு குடிநீருக்காக 3விசைபம்புகள் உள்ளன.தற்போது அவை பழுதடைந்துள்ளது. மேலும் ஒகேனக்கல் குடிநீரும்இங்கு வருவதில்லை. இதனால் இக்கிராமமக்கள் குடிநீருக்காக கடந்த இரண்டு வருடங்களாக சிரமப்பட்டு வருகின்றனர்.குடிநீர் பிரச்சனை குறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவேபழுதடைந்த மின்விசைபம்புகளை சரிசெய்யவேண்டும்.ஒகேனக்கல் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி திங்களன்று செங்காட்டுபுதூர் பொதுமக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.