tamilnadu

img

பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தொழிற்சாலைகள் தருமபுரி திமுக வேட்பாளர் எஸ்.செந்தில்குமார் வாக்குறுதி

தருமபுரி, ஏப்.15-பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தொழிற்சாலைகள் உருவாக்கப்படும் என தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.செந்தில்குமார் வாக்குறுதி அளித்தார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் திங்களன்று மொரப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கம்பைநல்லூர், இருமத்தூர், வகுரப்பம்பட்டி,கே.ஈச்சம்பாடி, செங்குட்டை, நவலை, எலவடை, மொரப்பூர், எச்.அக்ராஹரம் உள்ளிட்ட இடங்களில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், தென்பெண்ணை ஆற்றில் மழைக் காலங்களில் வீணாகும் உபரி நீரை நீரேற்றம்திட்டத்தின் மூலம் கம்பைநல்லூர், மொரப்பூர் வட்டாரப் பகுதியிலுள்ள ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் நிரப்ப நடவடிக்கை எடுப்படும். கம்பைநல்லூர் பேரூராட்சியில் அனைத்து பகுதியிலும் குடிநீர், சாலைகள், கழிப்பிடம், மின் விளக்கு வசதிகளை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்வேன். மொரப்பூர் முதல் காரிமங்கலம் வரையிலும் உள்ள தார்ச் சாலையை அகலப்படுத்தவும், கூடுதல் பேருந்து வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுப்பேன். கம்பைநல்லூர் பகுதியில் இளைஞர்கள், மகளிர் வேலைவாய்ப்புகளை பெறும் வகையில் புதிய தொழிற்சாலைகள் உருவாக நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளித்தார்.இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாலக்கோடு வட்டம் வெள்ளிச்சந்தை கிராமத்தில் தீவிர வாக்குசேகரிப்பு நடைபெற்றது. இதில், பாலக்கோடு வட்ட செயலாளர் ஜி.நக்கீரன், ஒன்றியகுழு உறுப்பினர்கள் என்.சந்திரசேகரன், சக்தி, முனுசாமி, செல்வராஜ் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.

பாப்பிரெட்பட்டி

பாப்பிரெட்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுகவேட்பாளர் ஆ.மணி தொகுதிக்குட்பட்ட மெணசி,மருக்காலாம்பட்டியில் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகேட்டு பிரச்சாரம் செய்தனர்.

;