tamilnadu

img

நாடு சிறந்து விளங்க குழந்தைகளின் கல்வி முக்கியமானது பள்ளி கட்டிட திறப்பு விழாவில் டி.கே.ரங்கராஜன் எம்.பி., பேச்சு

பென்னாகரம், மார்ச் 9- நாடு சிறந்து விளங்க குழந்தை களின் கல்வி வளர்ச்சி முக்கிய மானது என மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தெரிவித்தார். தருமபுரி மாவட்டம், பென்னா கரம் ஒன்றியம், மலையூர் நடு நிலைப் பள்ளியில்  மூன்று வகுப் பறைகள் கட்ட மார்க்சிஸ்ட் கட்சி யின் நாடாளுமன்ற மாநிலங்க ளவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.25  லட்சம் ஒதுக்கீடு செய்திருந்தி ருந்தார். இந்நிலையில் இந்த புதிய வகுப்பறைக்கான கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில், அதன் திறப்பு விழா திங்களன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு  தலைமையாசிரி யர் சண்முகம் தலைமை தாங்கி னார். முன்னாள் ஒன்றிய கவுன் சிலர் சின்னசாமி வரவேற்புரை ஆற்றினார். பென்னாகரம் வட் டார வளர்ச்சி அலுவலர் மணி வண்ணன் கல்வெட்டை திறந்து வைத்தார்.  இதைத்தொடர்ந்து மாநிலங் களவை உறுப்பினர் டி.கே.ரங்க ராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று புதிய கட்டிடத்தை திறந்துவைத்து சிறப்புரை ஆற்றி னார். அப்போது அவர் பேசியதா வது, ஒரு நாடு சிறந்து விளங்க வேண்டுமென்றால் அந்நாட்டின் குழந்தைகளுடைய கல்வி வளர்ச்சி மிக முக்கியமானது. நாடாளு மன்ற உறுப்பினர் நிதியில் இருந்து மழையூர் நடுநிலைப் பள்ளிக்கு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அந்த நிதியில் இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஏதோ என்னுடைய பரம்பரை சொத்தில் இருந்து கொடுக்கப் பட்டது அல்ல, மக்கள் வரிப்பண மாக செலுத்திய நிதியிலிருந்து மக்களுக்கே தொகுதி வளர்ச்சி நிதி என்ற பெயரில் கொடுப்பதற் கான ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது என அவர் பெருமி தத்தோடு குறிப்பிட்டார். மேலும், இங்கு  குழந்தைகளாக அமர்ந்திருக்கும் புதிய தலை முறைக்கு அறிவு அதிகம். பழைய தலைமுறைக்கு அந்த அளவுக்கு இல்லை. நாங்கள் படிக்கின்ற காலத்தில் தொலைக்காட்சி உள் ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லை. தற்பொழுது இருக்கும் அறிவியல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி குழந் தைகள் நன்றாகப் படித்து மேலே வரவேண்டும். அறிஞர்களாக, விஞ்ஞானிகளாக, விளையாட்டு வீரர்களாக சிறந்து விளங்க வேண்டும். குடியரசுத் தலைவர் கையில் விருது வாங்கும் அள விற்கு இதுபோன்ற கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வளர வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளுடைய படிப்பு சிறப் படைய ஊக்கப்படுத்த வேண் டும். படிப்புக்கு எல்லையே கிடை யாது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி என்றும் உறுதுணை யாக நிற்கும். இவ்வாறு டி.கே.ரங்கராஜன் எம்.பி., பேசினார். இவ்விழாவில் ஒன்றிய கவுன் சிலர் ராதிகா அன்பரசு, ஊராட்சி மன்ற உறுப்பினர் புவனேஸ்வரி, ஊர் பிரமுகர்கள் கோபால், ஏகாம் பரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார், செயற்குழு உறுப்பினர் கள் பி.இளம்பரிதி, வி.மாதன், ஆர்.சிசுபாலன், சோ.அர்ஜுனன், டி.ஸ்.ராமச்சந்திரன், வி.விசுவ நாதன் மற்றும்  ஆர்.சின்னசாமி, ஜி.சக்திவேல், ரவி, பள்ளி ஆசிரி யர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;