tamilnadu

img

தருமபுரி புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது கண்காட்சி

தருமபுரி, ஜன. 21- தருமபுரி அருகே இலக்கியம்பட்டி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில்  தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது  கண்காட்சியினை  மாவட்ட வருவாய் அலுவலர் எச். ரஹமத்துல்லா கான் துவக்கி வைத்தார். தருமபுரி மாவட்ட  அளவில் நடைபெறும் இந்த அறிவியல்  கண்காட்சியினை மாவட்ட வருவாய் அலுவலர் மாணவ, மாணவிகளின் படைப்புகளை  பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தார். தரும புரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி களில்  இருந்து  சுமார்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பார்வை யிட்டனர்.  மேலும், அரங்குகளில்  பார்வைக்கு வைக் கப்பட்ட தங்களது  படைப்புகள் சார்பாக  உரிய விளக்கத்தினை  பார்வையாளர்களுக்கு தெரிவித்த னர். இக்கண்காட்சியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில்  இருந்தும் 95 மாணவ, மாண விகளின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த புத்தாக்க அறிவியல்  ஆய்வு விருது  கண்காட் சிக்கான முன்னேற்பாடு பணிகளை அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியை கவிதா மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் முதன்மைக்கல்வி அலுவலர் அ. முத்துகிருஷ்ணன்,   பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் வே.ஹேமலதா, மாவட்டக்கல்வி அலுவலர்கள் பால சுப்பிரமணி, பொன்முடி, சண்முகவேல் மற்றும் அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள்  உள்ளிட்ட திராளானோர் கலந்து கொண்டனர்.

;