tamilnadu

தருமபுரி, நாமக்கல் முக்கிய செய்திகள்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்க தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

தருமபுரி, செப்.7- புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யகோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பாப்பிரெட்டிபட்டி வட்ட மாநாடு பாப்பிரெட்டிபட்டியில் சனியன்று நடை பெற்றது. இம்மாநாட்டிற்கு வட்டத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அறிக்கை சமர்பித்தார். மாவட்டச் செயலாளர் சேகர் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.  இம்மாநாட்டில், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை 56 ஐ ரத்து செய்யவேண்டும். காவிரி ஆற்று  நீரை, தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு கொண்டு  வர திட்ட முன் வடிவம் தயார் செய்து செயலாக்கத்திற்கு கொண்டு வர வேண்டும்.சேலம் முதல் அரூர் வரை உள்ள  பழுதடைந்த சாலையை உடனடியாக செப்பனிட வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக சிவசங்கர் நன்றி கூறினார்.
புதிய நிர்வாகிகள் தேர்வு
வட்ட தலைவராக சண்முகம், துணை தலைவர்களாக கரிகாலன், பாரதி சிவசங்கர், வட்ட செயலாளராக கிருஷ்ண மூர்த்தி, இணை செயலாளர்களாக வெங்கடேசன், ரங்க நாதன், கணபதி, வட்ட பொருளாளராக முனியராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினராக நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில், நில அளவை அலுவலர் ஒன்றிப்பின் மாநில துணைத் தலைவர் அண்ணாகுபேரன் நிறைவுரையாற்றினார்.

காவல் துணை கண்காணிப்பாளரை பணி நீக்கம் செய்க திருச்செங்கோட்டில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு 

நாமக்கல், செப்.7- திருச்செங்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி சனியன்று வழக்கறிஞர்கள் நீதி மன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம்,    திருச்செங்கோடு  அடுத்த மல்லசமுத்திரம் எம்.மேட்டுப் பாளையம் பகுதியில் நூறு வருடங்களாக பயன் படுத்தி வந்த பொதுப்பாதையை அகற்றப்பட்டது. இது தொடர்பாக  இரு தரப்புக்கு இடையே நடந்த சிவில் பிரச்ச னையில், திருச்செங்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் சண்முகம், வழக்கறிஞர் சுரேஷ் என்பவரை மிரட்டிய தாக தெரிகிறது.  இதைக் கண்டித்தும், காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகத்தை பணிநீக்கம் செய்ய வலி யுறுத்தி நாமக்கல் மாவட்ட வழக்கறிஞர்கள்  கூட்டமைப்பு சார்பில் திருச்செங்கோடு  ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின்  அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  மேலும் வெள்ளியன்று நீதிமன்ற புறக் கணிப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.  தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால்  தொடர் போராட்டம் நடத்தப்படும்  என வழக்கறிஞர்கள் கூட்டமைப்பினர்  அறிவித்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் திருச்செங்கோடு குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வெங்கடேஷ்கண்ணன், பார் அசோசியேசன் தலைவர் எஸ்.சேகரன்,  அட்வகேட் அசோசியேசன் தலைவர் மாணிக்கவேல், மூத்த  வழக்கறிஞர் வரத ராஜன் மற்றும் சேலம் வழக்கறிஞர் வெற்றி வேல், பரமத்தி சரவணன், நாமக்கல் அப்பாவு உள்ளிட்ட மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளை சேர்ந்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.    முன்னதாக நாமக்கல் மாவட்டம், மல்ல சமுத்திரம் ஒன்றியம், எம்.மேட்டுப் பாளையம் கிராமத்தில் நூறு வருடங் களுக்கு மேலாக பயன்படுத்திவந்த பொதுப்  பாதையை யாருடைய அனுமதியும் இல் லாமல் குறிப்பிட்ட சிலர் ஆக்கிரமித்து பொக்லைன் மூலம் பொதுப் பாதையை சேதப்படுத்தினர் என்று வந்த புகாரை அடுத்து திருச்செங்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் சண்முகம் நேரில் சென்று விசாரணை நடத் தினார். அப்போது நடைபெற்ற வாக்குவாத காட்சிகள் அடங்கிய காணொளி சமூக வலைதளங்களில் பரவியது.