மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்
தருமபுரி, செப்.16- மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத் திய தையல் இயந்திரம் பெறுவதற்கு விண்ணப்பிக் கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிருப்பதாவது, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக இயக்க குறைபாடு, செவித்தி றன் குறைபாடு மற்றும் 75 சதவிகிதத்திற்கு மேல் நுன் அறிவுத்திறன் குன்றியோரின் தாய்மார்கள் 18 வயது முதல் 45 வயது வரையுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத் தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகள் விண்ணப்பிக்க லாம். மேலும், மிதமான அறிவுசார் குறைபாடுடையோர் மற்றும் 75 சதவிகித நுன் அறிவுத்திறன் குறை பாடுடைய மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்க ளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது. ஆகவே 45 வயதிற்குட்பட்ட நபர்கள் தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, தையல் பயிற்சி முடித்ததற்கான சான்றுகளுடன் செப்டம்பர் 20 ஆம் தேதியன்று மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரூர் அருகே கீழானூர் வாணி ஆற்றில் தரைப்பாலம் அமைக்கக் கோரிக்கை
தருமபுரி, செப்.16- அரூர் வட்டம், கீழானூர் வாணி ஆற்றில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் கீழானூரிலி ருந்து வேப்பநத்தம் செல்வதற்கான இணைப்புச் சாலை உள்ளது. இந்தச் சாலை வழியாக செல்லம் பட்டி, கீழானூர், சங்கிலிவாடி, பொய்யப்பட்டி, மாவே ரிப்பட்டி, ஈட்டியம்பட்டி, முத்தானூர், வேப்பநத்தம், வடுகப்பட்டி, எச்.ஈச்சம்பாடி, கே.வேட்ரப்பட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்துச் செல்கின்றனர். விவசாயிகள் தங்களின் விவசாய விளைப் பொருள்களை டிராக்டர்கள், மினி சரக்கு வாகனங்களில் எடுத்துச் செல்கின்றனர். இதே போல், தீர்த்தமலை பகுதிக்குச் செல்லும் கிராம மக்களுக்கு இந்தச் சாலையானது மிகவும் பயனுள்ள தாக உள்ளது. இந்நிலையில், இந்த வழித்தடத்தின் குறுக்கே வாணியாறு செல்கிறது. இதனால் மழைக் காலங்க ளில் வாணியற்றில் தண்ணீர் செல்லும்போது இந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலையுள் ளது. இதனால் இந்தப் பகுதியிலுள்ள கிராம மக்கள் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் நிலையுள்ளது. எனவே, கீழானூர்-வேப்பநத்தம் இணைப்புச் சாலையில் வாணியாற்றில் தரைப்பா லம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இதில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி தரைப்பாலம் அமைத்திட விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.