tamilnadu

img

தருமபுரியில் அடிப்படை வசதிக்கு ஏங்கும் இருளர் சமூக மக்கள்

தருமபுரி,  ஜூன் 11 –  அரூரை அடுத்த டி.ஆண்டி யூரில் குடிநீர், தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதி இல் லாமல்  இருளர் சமூக மக்கள் அவ திப்பட்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியம், வேடகட்ட மடுவு கிராம ஊராட்சிக்கு உள்பட் டது டி.ஆண்டியூர் கிராமம். இந்த ஊரில் மலைவாழ் பழங்குடியின (எஸ்.டி) இருளர் சமூக மக்கள் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தி னர் வசிக்கின்றனர். இந்த கிராம மக்கள் வனப்பகுதியில் தேன், கிழங்குகள் மற்றும் விறகு எடுத் தல், ஆடு, மாடுகளை மேய்த்தல், விவசாயம் சார்ந்த கூலித் தொழில் களை செய்து வருகின்றனர்.

இவர் களின் குடிநீர் தேவைக்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் 10 ஆயிரம் லிட்டர் கொள் ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டப்பட்டுள் ளது. இம்மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு, இந்த ஊரில் உள்ள திறந்த வெளி கிணற்றில் இருந்து குடிநீர் எடுத்து பொதுமக்களுக்கு வழங்கியுள்ளனர். தற்போது, நில வும் வறட்சியின் காரணமாக இந்த  திறந்த வெளி கிணற்றில் சிறிதள வும் குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் கிராம மக்கள் இங் குள்ள ஒரு ஆழ்துளை கிணற்றில் பொறுத்தப்பட்டுள்ள மின் மோட் டாரில் இருந்து கிடைக்கும் தண் ணீரை பயன்படுத்தி வருகின்ற னர். இந்த தண்ணீர் கிராம மக்க ளுக்கு போதுமானதாக இல்லை எனவும், தீர்த்தமலையில் இருந்து கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, டி. அம்மாபேட்டை உள்ளிட்ட தொலைதூர பகுதிகளுக்கு ஒகே னக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் செல்கிறது.

ஆனால், இந்த குழாய் இணைப்பு கள் செல்லும் வழித்தடத்தில் உள்ள டி. ஆண்டியூர் இருளர் சமூக மக்க ளுக்கு ஒகேனக்கல் குடிநீர் கிடைப் பதில்லை என குற்றம் சாட்டியுள் ளனர். இதுகுறித்து டி.ஆண்டியூரில் வசிக்கும் இருளர் சமூக மக்கள் கூறுகையில், இருளர் குடியிருப்பு பகுதியில் இரண்டு மின் கம்பங்க ளில் மட்டும் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இருளர் குடியிருப்புக்கு அருகில் விவசாய நிலங்கள் மற்றும் வனப்பகுதி இருப்பதால் இரவு நேரங்களில் பாம்புகள் உள்ளிட்ட விஷப்பூச்சி கள் நடமாட்டம் அதிகம் உள்ள தால், அனைத்து குடியிருப்பு பகு திகளிலும் மின் விளக்கு வசதி களை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் இருளர் சமூகத்தில் போதிய கல்வி மற்றும் விழிப்பு ணர்வு இல்லாததால் இந்த கிராமத்துக்கு தேவையான அரசு நலத்திட்ட உதவிகள் எளிதில் கிடைப்பதில்லை.  எனவே டி.ஆண்டியூர் இருளர் சமூக மக்களுக்கு தேவையான குடி நீர், மின் விளக்குகள், தெருச் சாலைகள், கூடுதல் தொகுப்பு வீடு கள், கழிவு நீர்கால்வாய் வசதி களை ஏற்படுத்த மாவட்ட நிர்வா கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத் துள்ளனர்.

;