tamilnadu

img

காலிப் பணியிடங்களை நிரப்ப கோரி போராட்டம் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் முடிவு

தருமபுரி, ஆக.11- கூட்டுறவுத் துறையில் பல்வேறு பதவி நிலைகளில் ஏற்பட்டுள்ள ஆயிரத்து 530 காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்களை கூட்டுற வுத்துறை ஊழியர்கள் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு கூட்டுற வுத்துறை ஊழியர் சங்கத்தின் 14-வது மாநில பிரதிநித்துவப் பேரவை ஆகஸ்ட் 10,11 தேதிகளில் தருமபுரியில் தோழர் எம்.முருகன் நினைவரங்கில் (டி.என்.சி.விஜய் மஹாலில்) நடைபெற்றது. இப்பேரவையில், சார்பதி வாளர், கள அலுவலர் பணிகளை வரையரை செய்து திருந்திய வேலை அட்டவணை வழங்க வேண்டும், தற்காலிக பணி நீக்கம், 17-பி, 17-எ, குற்றச்சாட்டு குறிப்பாணைகளை விரைந்து முடிக்க வேண்டும். ஓய்வூதிய பயன்களை வழங்க தடையாக பிறப்பிக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை விரைந்து முடித்து தீர்வு காண வேண்டும். துணைப்பதிவாளர் நேரடிநிய மனத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மேற்கண்ட கோரிக்கை களை வலியுறுத்தி பதிவாளர், அரசுத்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு ஆக.21 அன்று மின்னஞ்சல் அனுப்புவது, இணைபதிவாளர் மற்றும் பதிவாளர் அலுவலகம் முன்பு செப்.18 அன்று ஆர்ப்பா ட்டம் நடத்துவது, மூன்றாம் கட்டமாக சென்னை பதிவாளர் அலுவலகம் முன்பு அக்.8 அன்று கவன ஈர்ப்பு பெருந்திரள் முறையீடு நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பணி ஓய்வு பெற்ற நிர்வாகிகள் பாராட்டப்பட்டனர். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் சிறை சென்றவர்கள் கவுரவிக்கப்பட்ட னர். ஸ்தாபக தலைவர் என்.இளங்கோ உள்ளிட்டோர் பேசினர்.
போராட்டம் தொடரும்
மாநாட்டை நிறைவு செய்து பேசிய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மு.அன்பரசு பேசுகையில், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத நிலுவைத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் மாநிலஅரசு ஈடுபட்டு வருகிறது. இதனை முறியடிப்போம். பழைய பென்சன் திட்டம் அமல்படுத்தும் வரை போராட்டம் தொடரும் என்றார்
நிர்வாகிகள்
அமைப்பின் மாநிலத் தலைவராக மு.சௌந்த ரராஜன், பொதுச் செயலாளராக வெ.செல்லையா, பொருளாள ராக ஆர்.பட்டாபிராமன், துணைத் தலைவர்களாக சு.பத்மா, கே.எஸ்.மாரியப்பன், பா.சிவக்குமார், தி.க.ராமசாமி, க.பிச்சைவேலு, என்.வேலாயு தம், துணைச் செயலாளர்க ளாக சேவியர் எக்ஸ்பெடிட் செபஸ்டின், கோ.பழனி யம்மாள், த.ராமகிருஷ்ணன், ச.பாலகிருஷ்ணன், நவநீத கிருஷ்ணன், வினோத்ராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;