tamilnadu

ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரிக்கு தன்னாட்சி அங்கீகாரம்

தருமபுரி, ஜன. 28- ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு தன்னாட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரி 2000 ஆம் ஆண்டு 80 மாணவா்களைக் கொண்டு தொடங்கப்பட்டது. குறுகிய காலத்திலே பல்கலைக்கழக மானியக் குழு 2(எப்) மற்றும்  12(பி) அங்கீகாரத்தைப் பெற்றது. சுயநிதி  கல்லூரிகளில் முதல் சுற்றிலே தேசிய தர மதிப்பீட்டுக் குழுவால் (நாக்) ‘ஏ’ கிரேடு அங்கீகாரம் பெற்றுள்ளது. தற்போது 4,300 மாணவா்கள், 300 பேராசிரியர்களுடன் இக்கல்லூரி செயல்படுகிறது.  மத்திய அரசு மனித வள மேம்பாட்டுத்  துறையின் கீழ் இயங்கிவரும் பல்கலைக் கழக மானியக் குழுவால் (யுஜிசி) நியமிக் கப்பட்ட ஆய்வுக் குழுவினா் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய ஆய்வில் அனைத்து வசதி களுடன் இக்கல்லூரி செயல்படுவது உறுதி  செய்யப்பட்டது. இதுகுறித்து அனுப்பப் பட்ட பரிந்துரையை ஏற்று, இக் கல்லூரிக்கு  2019 - 2020 கல்வியாண்டு முதல்  தன்னாட்சி அங்கீகாரம் வழங்கப்பட் டுள்ளது. இதையடுத்து மத்திய மனித வள  மேம்பாட்டின் கீழ் இயங்கி வரும் பல் கலைக்கழக மானியக் குழுவுக்கும், பெரியார்  பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் வித்யா மந்திர் கல்விக் குழுமத்தின் நிறுவனா் வே. சந்திரசேகரன் நன்றி தெரிவித்தார். 

;