tamilnadu

தருமபுரி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையம் துவக்க அனுமதி

தருமபுரி, ஜூன் 6- தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு துவக்கப்பட உள்ளதாக மருத்துவக்கல்லூரி முதல்வர் தெரிவித்தார். இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் பூவதி செய்தியாளர் களிடம் கூறுகையில், தருமபுரி அரசு மருத் துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு தனி வார்டு உருவாக்கப்பட்டு 500 படுக்கை வசதியிடன் உள்ளது. 60 வென்டிலேட்டர் வசதி உள்ளது. ஐஎம்சிஆர் அனுமதியிடன் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் கொரோனா பரி சோதனை செய்யப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தில் 8821,  திருப்பத்தூர் 5570, கிருஷ்ணகிரி 513, திருவண்ணாமலை 266 என மொத்தம் 15,170 பேருக்கு கொரோனா  நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட் டுள்ளது. இதில், 36 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இதில், தருமபுரி மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு 8 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 2 பேர்  சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது  கொரோனோ பரிசோனை பிசிஆர் நாள்  ஒன்றுக்கு 300 முதல் 400 பேர் வரை பரி சோதனை செய்யும் வசதி உள்ளது. மருத்து வர், செவிலியர் மற்றும் ஊழியர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் தேவைக்கு ஏற்றதுபோல் இருப்பு உள்ளது. கொரோனா சிகிச்சை மையத்தில் பணி புரியும் மருத்துவர், செவிலியர்கள் தனி  அறையில் தங்கும் வசதி செய்யப்பட் டுள்ளது. உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது தருமபுரி மாவட்டத்தில் தலை சீமீயா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திங்கள்கிழமை முதல் சிகிச்சை அளிக்கப் படுகிறது. இந்த மாதத்தில் புதியதாக  புற்றுநோய் சிகிச்சை மையம் துவக்க அரசு அனுமதித்துள்ளது. ஆகவே, இந்த மாதம் சிகிச்சை மையம் துவங்கும்.  இதற்கான கட்டிடவசதி உருவாக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இச்சந்திப்பின்போது உள்ளிருப்பு மருத் துவ அலுவலர் மருத்துவர் இளங்கோவன்  உடனிருந்தார். 

;