tamilnadu

img

ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு

தருமபுரி, நவ.4-  ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சனியன்று  விநாடிக்கு 6,300 கனஅடியாக இருந்தது. இந்நிலையில்,  காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, ஞாயிறன்று காலை நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு சனிக்கிழமை 6,712 கனஅடியாக இருந்த நீர்வரத்து ஞாயிறன்று 9,917 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  அணை நீர்மட்டம் 107.32 அடியாகவும், நீர் இருப்பு 74.65 டிஎம்சியாகவும் இருந்தது.