tamilnadu

img

தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 28 ஆம் தேதி அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

2019 ஆண்டிற்கான தீபாவளி வரும் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதனால் தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை என இருந்தது. இந்நிலையில் தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 28 ஆம் தேதி அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 9 ஆம் தேதி பணி நாளாக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
 

;