tamilnadu

img

நாளை முதல் டோக்கன்

சென்னை, ஏப். 22- சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புத னன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் கொரோனா நடவடிக்கை குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் முத லமைச்சர் பழனிசாமி ஆலோ சனை நடத்தினார். ஊரடங்கு  காலத்தில் உணவு பொருட் கள் இருப்பு குறித்து கேட்ட றிந்தார். மேலும் மருத்துவர்க ளுடனும் ஆலோசனை நடத்தினார். பின்னர், சென்னை ராஜீவ் காந்தி அரசு  மருத்துவ மனையில் கொரோனா சிறப்பு பிரிவில்  பணியாற்றி வரும் மருத்து வர்கள் மற்றும் செவிலியர்க ளுடன் கணொலி காட்சி மூல மாக பேசினார். நோயாளி களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்ட றிந்தார்.

மேலும் மருத்துவர்கள் செவிலியர்களுக்கான பாது காப்பு அம்சங்கள் குறித்தும்  கேட்டறிந்த முதலமைச்சர், உரிய பாதுகாப்புடன் சிகிச்சைகளை மேற்கொள் ளுமாறு அறிவுறுத்தினார். பிறகு அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை யில், பொது விநியோக  திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அடுத்த மாதமும் அத்தியாவ சிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்றார்.அதற் கான டோக்கன் ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய இரு தேதி களில் வழங்கப்படும். அந்த டோக்கனில் குடும்ப அட்டைதாரர்கள் எந்த  தேதியில், எந்த நேரத்தில் பொருள் வாங்க ரேஷன் கடைகளுக்கு வரவேண்டும் என்று குறிப்பு எழுதிக் தரப்ப டும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.