tamilnadu

img

திமுக போராட்டம்

சிறுபான்மையினருக்கு எதிராகவும் ஈழத் தமிழருக்கு எதிராகவும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் குடியுரிமைச் சட்டமா? குடியுரிமை பறிப்புச் சட்டமா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். குடியுரிமை சட்ட மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி திமுகவின் சார்பில் செவ்வாய்க்கிழமை (டிச.17)  பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் சுந்தர் எம்எல்ஏ தலைமை வகித்தார். திமுக தலைவர்  மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு குடியுரிமை சட்ட  மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினார்.

;