மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் ஞாயிறன்று (மே 26) தரமணி ஈவான்ஸ் பள்ளியில் நோன்பு திறப்பு நிகழ்வு நடைபெற்றது. நலக்குழுவின் தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் ரபீக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ், வேளச்சேரி பகுதிச் செயலாளர் கே.வனஜகுமாரி, நலக்குழு மாநில துணைத்தலைவர் டி.லட்சுமணன், மாவட்டச் செயலாளர் ஒய்.இஸ்மாயில், அருட்தந்தை எஸ்.ஜே.ராபின், சையத் இப்ராகீம் ஆலிம்ஷா, குருஜீ சந்தோஷ், ராஜேந்திரன், அந்தோணி பெர்னான்டஸ்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.