திருச்சிராப்பள்ளி, ஜூன் 11- மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றது போல வரும் தேர்த லிலும், வெற்றி பெற்று எதிர்க்கட்சி களுக்கு மரண அடி கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். திருச்சியில் திங்கள்கிழமை இரவு, தென்னூர் உழவர் சந்தை மைதா னத்தில் நடைபெற்ற கருணாநிதியின் 96 ஆவது பிறந்த நாள் விழா, மக்களவைத் தேர்தலில் திமுகவை வெற்றி பெறச் செய்தமைக்கான நன்றி அறிவிப்பு விழா பொதுக்கூட்டம் மற்றும் கலை ஞர் அறிவாலயத்தில் அண்ணா. கலை ஞர் சிலை திறப்பு ஆகிய முப்பெரும் விழாவில் பங்கேற்ற திமுக தலை வர் மு.க.ஸ்டாலின், மக்களவை உறுப் பினராக தேர்வு பெற்றவர்களுக்கு சால்வை அணிவித்து பேசியதாவது: நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த வாக்காளர் களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அனைத்து தரப்பினரின் உழைப்புதான் இந்த வெற்றியை பெற்றுத் தந்துள்ளது எனவே அனைவருக்கும் நன்றி.
ஆனால் இந்த வெற்றியையும் சிலர் குறை கூறி வருகின்றனர். குறை கூறுவதற்கென்றே உள்ள குருவிக் கூட்டங்கள் ஏதாவது கூறிக்கொண்டு தான் இருக்கும். நாங்கள் பெற்ற வெற்றி, பொய் பிரச்சாரம் செய்து பெற்ற வெற்றி என சிலர் கூறுகின்ற னர். அப்படியெனில் மோடி பெற்ற வெற்றி முறைகேடு செய்து பெற்ற வெற்றியா? இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த வெற்றி இது. இந்த வெற்றியால் என்ன ஆகப் போகிறது என கேட்கின்றனர் சிலர். பெரியார், அண்ணா, கருணாநிதி காட்டிய வழியில் செல்பவர்கள் நாங்கள். உறவுக்கு கை கொடுப் போம், உரிமைக்கு குரல் கொடுப் போம். அண்மையில் அறிவித்த இந்தி அறிவிப்பை உடனே திரும்ப பெற வைத்தவர்கள் நாங்கள். இனியும் போகப் போக பார்ப்பீர்கள். அதிமுக உறுப்பினர்களைப் போல அடிமை களாக இருக்க மாட்டோம். மத்திய அரசு, காவிரி நீர் பிரச்சனை குறித்து 5 மாதம் முன்பாக பேச வேண்டும். ஆனால் தாமதமாக பேச்சை தொடங்கி யது மட்டுமல்லாது, காவிரிப் பிரச்சனை யை விட்டு, மேகதாது பிரச்சனை குறித்து பேச வேண்டிய அவசியம் என்ன? அதிமுக ஆட்சியில் 8 ஆண்டு களாக தமிழகத்தில் மேட்டூர் அணை குறிப்பிட்ட ஜூன் 12ல் திறக்கப்பட வில்லை, எனவே குறுவை சாகுபடியும் கிடையாது. இதை விடுத்து 8 வழிச் சாலை பணிகள் குறித்து பேசுகிறார் முதல்வர். அண்மையில் சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மக்களிடம் 8 வழித்திட்டத்தை விளக்கி அத்திட்டத் தை கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என்கிறார், என்ன காரணம்? காரணம் பணம்தான்.
பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு ஆட்சி நடத்தி வருகின்றனர். 8 வழிச்சாலை பணிகள் மூலம் ரூ. 3,000 கோடி கமிஷன் கிடைக்கும். காவிரி நீர் வருவதால் கமிஷன் கிடைக்குமா? ஒரு வேளை விவசாயிகள் சேர்ந்து அதற்கு கமிஷன் கொடுத்தால் காவிரி நீர் குறித்து பேசுவார்களோ என்ன வோ. இதில் நானும் ஒரு விவசாயி என்கிறார், விவசாயிகளின் நலனில் அக்கரையில்லாமல் அவர்களுக்கு எதிராக செயல்படும் முதல்வர். நீட் தேர்வில் கடந்தாண்டு 2, நிக ழாண்டு 3 உயிர்கள் பலிகொடுத்தாகி விட்டது. இதுபோல தமிழக பிரச்சனை களை வலியுறுத்தியும் தீர்வு காண வும் விழுப்புரம் முதல் ராமேஸ்வ ரம் வரையில் நடத்தும் மனித சங்கிலி போராட்டத்துக்கு முழு ஆதரவு அளித்து அதனை வெற்றிபெறச் செய்ய வேண்டும். அதைப்போலவே நடந்து முடிந்த தேர்தலில் வெற்றியைக் கொடுத்து எதிர்க்கட்சிகளுக்கு மரண அடி கொடுத்ததுபோலவே வரவுள்ள தேர்தலிலும் வெற்றியை பெற்று மரண அடி கொடுக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில், திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.என். நேரு தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி ந. தியாக ராஜன் முன்னிலை வகித்தார். மாநகர செயலாளர் க. அன்பழகன் வரவேற் றார். மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என். சிவா, மக்களவை உறுப்பினர்களாக வெற்றி பெற்ற எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (தஞ்சை), செல்வராஜ் ( நாகை) உள்ளிட்டோரும் பேசினர். வெற்றி பெற்ற மக்களவை உறுப்பினர்கள் ஜோதிமணி (கரூர்), ராமலிங்கம் (மயிலாடுதுறை), சட்டப் பேரவை உறுப்பினர்களாக வெற்றி பெற்ற நீலமேகம் (தஞ்சை) பூண்டி கே. கலைவாணன் (திருவாரூர்) செந்தில்பாலாஜி (அரவக்குறிச்சி), மற்றும் அன்பில் மகேஷ்பொய்யா மொழி, பெரியசாமி, ஸ்டாலின்குமார், சௌந்தரபாண்டியன், திருச்சி மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.