tamilnadu

img

திமுக - காங். கூட்டணி பலமாக உள்ளது: நாராயணசாமி

சென்னை,ஜன.18- தமிழகம், புதுவையில் திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளதாகவும் வரும் சட்டமன்ற தேர்தலி லும் கூட்டணி தொடரும் என்றும் புதுச்சேரி முதல மைச்சர் நாராயணசாமி தெரி வித்துள்ளார். சென்னை அண்ணா அறி வாலயத்தில் திமுக தலை வர் மு.க.ஸ்டாலினை அவர் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளவும் பொங்கல் வாழ்த்து தெரிவிக்கவும் மு.க.ஸ்டாலினை சந்தித்த தாக தெரிவித்தார். திமுக காங்கிரஸ் கூட்ட ணியில் எந்த பிரிவும் இல்லை  என்ற அவர், அரசியல் கூட்ட ணியில் ஒரு சில நேரங்க ளில் கருத்து வேறுபாடுகள் வருவது வழக்கம் என்றும்,  அதை பேசி தீர்த்துக்கொள் வோம் என்றும் கூறினார்.

;