tamilnadu

img

மக்கள் கூடும் நிகழ்ச்சிகளும் பொதுக்கூட்டங்களும் தவிர்த்திடுக!

மார்ச் 23: தியாகிகள் தினம்

இடதுசாரிக் கட்சிகள் அறிக்கை

புதுதில்லி, மார்ச் 17- கொரோனா பாதிப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக மார்ச் 23 பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய தியாகிகள் தினத்தன்று மக்கள் கூடும் நிகழ்ச்சிகளையும், பொதுக் கூட்டங்களையும் தவிர்த்திடுமாறு இடது சாரிக் கட்சிகள் கேட்டுக் கொண்டுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி(எம்எல்) லிபரேசன், அகில இந்திய பார்வர்டு பிளாக், புரட்சி சோசலிஸ்ட் கட்சி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஐந்து இடதுசாரிக் கட்சிகளும் இணைந்து - பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய தியாகிகள் தூக்குமேடை ஏறிய மார்ச் 23 தியாகிகள் தினத்தை குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நடைபெற்றுவரும் கிளர்ச்சிப் போராட்டங்களை ஒருமுகப் படுத்திடக்கூடிய விதத்திலும், தில்லியில் நடந்த இந்துத்துவா வன்முறை வெறியாட்டங் களைக் கண்டித்தும், பெரும்பான்மையான மக்கள்மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் பொருளாதாரச் சுமைகளை ஏற்றி யிருப்பதற்கு எதிராகவும் அனுசரித்திடுமாறு அறைகூவல் விடுத்திருக்கின்றன. கொரோனா வைரஸ் தொற்றுப் பிரச்சனை உள்ளநிலையில், மக்கள் கூடும் நிகழ்ச்சி களும் பொதுக் கூட்டங்களும் தவிர்க்கப்பட வேண்டும். எனினும் இத்தனை ஆண்டு கால மும்  தொடர்ந்து அனுசரித்து வந்ததைப் போல், தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட வேண்டும். இவ்வாறு இடதுசாரிக் கட்சிகள் அறிக்கையில் கூறியுள்ளன. (ந.நி.)

 

;