tamilnadu

img

டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் 35 பேருக்கு சம்மன்

சென்னை, மார்ச் 3- டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் சிக்கியுள்ள அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரிக்க சிபி சிஐடி காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் முறைகேடு செய்து  பலர் அரசு வேலைக்கு தேர்வானதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் 39 பேர்  தவறான வழியில் தேர்வா னது தெரிய வந்தது. சிபிசி ஐடி காவல்துறையினர் இந்த  வழக்கை விசாரித்து வருகி றார்கள். இந்த முறைகேடு  செய்வதற்கு உறுதுணை யாக இருந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோல் 2017 ஆம் ஆண்டு குரூப்-2 ஏ தேர்வில் முறைகேடு செய்து தலைமை செயலகம், வட் டாட்சியர் அலுவலகம், பத்தி ரப்பதிவு அலுவலகம் மற்றும்  அரசு பணிகளில் 42 பேர்  சேர்ந்தது சி.பி.சி.ஐ.டி. விசா ரணையில் தெரியவந்தது. இதற்காக லட்சக்கணக்கான ரூபாய் கைமாறி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. முறைகேடாக பணியில் சேர்ந்த 10 பேர் கைது செய் யப்பட்டனர். 

இது தவிர கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்விலும் முறைகேடு நடந்தது தெரிய  வந்தது. அதிலும் ஓம்காந்தன்,  ஜெயக்குமார் ஆகியோ ருக்கு தொடர்பு இருந்ததை சிபிஐ காவலர்கள் கண்டு பிடித்தனர்.  டிஎன்பிஎஸ்சி தேர்வு  மோசடியில் ஓம்காந்தன், ஜெயக்குமார் போன்று  டிஎன்பிஎஸ்சி அதிகாரி களுக்கும் தொடர்பு இருந்த தாக சிபிசிஐடி விசாரணை யில் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 35 பேர் வரை இந்த மோசடியில் ஈடு பட்டிருந்ததாக தெரிகிறது. முறைகேட்டில் சிக்கி யுள்ள அதிகாரிகளையும் நேரில் அழைத்து விசா ரிக்க சிபிசிஐடி காவல்துறை யினர் முடிவு செய்துள்ள னர். எனவே 35 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட உள்  ளது. படிப்படியாக அவர்க ளிடம் இந்த விசாரணை நடைபெறும் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரி விக்கின்றன.