tamilnadu

img

கர்நாடகாவில் புதிய அமைச்சரவை எப்போது?

பெங்களூரூ, ஆக. 12- கர்நாடகாவில் வரும் 16ம் தேதிக்கு பிறகே புதிய அமைச்சரவை அமைக்கப்படும் என அம்மாநில முத லமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெலகவியிலுள்ள சாம்ப்ரா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சரவையில் இடம்பெறுபவர்களின் பட்டியல், கட்சி மேலிடத்தில் கலந்தாலோசித்து முடிவெடுத்த பின்னரே அறிவிக்கப்படும் என தெரிவித்தார். மேலும் வருகிற 16ம் தேதி தில்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாகவும், கர்நாடக மாநிலத்தின் வெள்ள பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகளுக்கான நிதி ஆகியவை குறித்து அவருடன் ஆலோசிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.