சென்னையில் அக். 2-6 தேதிகளில் நடைபெறுகிறது
சென்னை, செப். 20- தென்னிந்திய மக்கள் நாடக விழா அக்.2 முதல் 6ந் தேதி வரை 5 நாட்கள் சென்னையில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கமும், கேரள சமாஜ மும் இணைந்து இந்த விழாவை நடத்துகின்றன. தென்னக பண்பாட்டு மையம், தமிழக அரசின் கலை பண்பாட்டு துறை ஆகியவற்றின் ஆதரவோடு இந்த நாடக விழா நடைபெறுகிறது. ஒரே சமயத்தில் ஆயிரம் பேர் அம ரக்கூடிய கேரள சமாஜம் அரங்கில் நாடகம் நடைபெறு கிறது. தினசரி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நாட கங்கள் நிகழும். பார்வையாளர்க ளுக்கு கட்டணம் கிடையாது. தமிழகத்தின் முன்னணி நாடக குழுக்களான கூத்துப் பட்டறை, சென்னை கலைக்குழு, மரப்பாச்சி, பெர்ச், ஷ்ரத்தா, ஸ்டேஜ் ஃப்ரண்ட்ஸ், மணல் மகுடி, மாற்று நாடக இயக்கம், புகிரி அரங்காட்டம், பாண்டிச் சேரியை சேர்ந்த இண்டிய னோஸ்ட்ரம், வெளிப்படை அரங்க இயக்கம், கேரளாவை சேர்ந்த பஞ்சமி தியேட்டர்ஸ், கர்நாடகவை சேர்ந்த நடனா, தெலுங்கானாவை சேர்ந்த சம்ஹாரா உட்பட 6 மாநிலங்க ளைச் சேர்ந்த 500 கலை ஞர்களை உள்ளடக்கிய 32 நாடகக் குழுக்கள் பங்கேற்கின் றன. அக்.2 அன்று பேரணியுடன் தொடங்கும் நாடக விழாவை இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா தொடங்கி வைக்கி றார். தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் க. பாண்டியராஜன், திரைக்கலைஞர்கள் நாசர், சச்சு, ரோகிணி, இயக்குநர்கள் பா. ரஞ்சித், ராஜூமுருகன், லெனின் பாரதி, நாடாளுமன்ற உறுப்பி னர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், நல்லி குப்புசாமி, நக்கீரன் கோபால், கவிஞர் தேவேந்தர பூபதி உள்ளிட்ட ஆளுமைகள் தொடக்க விழாவில் கலந்து கொள்கின்றனர். இது தொடர்பாக நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமுஎகச மாநில பொதுச் செயலா ளர் ஆதவன் தீட்சண்யா, நாடக விழாக்குழு தலைவர் ரோகிணி, செயலாளர் பிரளயன் ஆகி யோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நடுத்தர மக்களுக்காக அரங்கங்களில் செயல்படும் குழுக்கள் மட்டுமின்றி, வீதி களில், திறந்தவெளிகளில், கிரா மங்களில் மக்களிடையே செயல்படும் குழுக்கள், சர்வ தேச விழாக்களில் பங்கேற்கும் குழுக்கள் இந்த நாடக விழா வில் பங்கேற்கின்றன. 5 மொழி களில் நாடகம் நடைபெறும். காந்தியடிகளின் 150வது பிறந்த நாளான அக்.2 அன்று நாடக விழா தொடங்குகிறது. அன்றைய தினம் ‘காந்தியும் அம்பேத்கரும்’ எனும் நாடகம் நடைபெறுகிறது. நாடகத்திலிருந்து திரைப் படத்திற்கு சென்ற திரைக்கலை ஞர்கள் நாசர், ரோகிணி, கலை ராணி, விமல், குருசோமசுந்தரம், குமரவேல், வேலராமமூர்த்தி போன்றோர் பங்கேற்கும் ‘நாட கம் போற்றுதும்’ எனும் ஓராள் நாடக நிகழ்வு அக்.5ம் தேதி நடைபெறுகிறது. தென்னிந்திய அளவிலான பிரலபமான நாடக ஆளுமைகள் பங்கேற்கும் கருத் தரங்கமும் இவ்விழாவில் நடை பெற உள்ளது. திரைத்துறை முன்னணி கலைஞர்களும் விழா வில் பங்கேற்க உள்ளனர்.
இளைஞர்கள் நாடகத்தில் அதிகளவு ஈடுபாடு செலுத்து கின்றனர். உயர்கல்வி வளாகங்க ளில் நாடக செயல்பாடு முக்கிய மானதாக மாறி வருகிறது. ஆங்கி லத்தில் நாடகம் நடத்தியவர்கள் கூட இப்போது தமிழில் நாடகம் நடத்த தொடங்கியுள்ளனர். திரைத்துறைக்கு சென்றாலும் பலர் நாடகக் குழுக்களை நடத்திக் கொண்டுதான் இருக்கி றார்கள். அத்தகையோரும் விழாவில் பங்கேற்கின்றனர். சென்னை மக்கள் நேரடி யாக உயிர்ப்பான கலை அனு பவத்தை பெறும் வகையில் நாடக விழா அமையும். 5 நாட்கள் 12 மணி நேரம் வீதம் 60 மணி நேரம் நாடகங்கள் நிகழும். மக்க ளின் வலிகளை, கோபதாபங் களை, கேட்க விரும்பும் கேள்வி களை நாடகங்கள் வாயிலாக கலைஞர்கள் எழுப்புவார்கள். இவ்வாறு அவர்கள் கூறி னர். கேரள சமாஜ தலைவர் பி.கே.என். பணிக்கர், செயலா ளர் பாலகிருஷ்ணன், விழாக் குழு இணைச் செயலாளர் கி. அன்பரசன், நிர்வாகிகள் அசோக் சிங், ராஜேந்திரகுமார் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.