tamilnadu

img

தேர்தல் ஆணையர்கள் இடையே மோதல் முற்றியது

புதுதில்லி, மே 18-பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிரானதேர்தல் விதி மீறல் புகாரில் எனது கருத்தைஅரோரா ஏற்காததால் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப் போவதில்லை என இந்தியதலைமை தேர்தல் ஆணையருக்கு தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கடிதம் எழுதி உள்ளார்.மகாராஷ்டிரத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி, முதன் முறை வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை, பாகிஸ்தானின் பாலக்கோட்டில் தாக்குதல் நடத்திய வீரர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்றுபேசினார். மோடியின் இந்த பேச்சு தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று கூறி தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.இதேபோல், மேற்கு வங்கத்தில் தேர்தல் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, இந்திய பாதுகாப்புப் படை வீரர்களை மோடியின் படை என்றுகுறிப்பிட்டார். அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு எதிராகவும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார்கள் குறித்து ஆய்வு நடத்தியதேர்தல் ஆணையம், மேற்கண்ட சம்பவங்களில் தேர்தல் நடத்தை விதிகளை மோடி மீறவில்லை என்ற முடிவு எடுத்தது. இதையும் சேர்த்து, மோடிக்கு எதிரான 8 புகார்கள் மீதுதேர்தல் ஆணையம் இதுவரை முடிவெடுத்துள்ளது.மோடி, அமித்ஷாவின் தேர்தல் விதிமீறல்கள் மீதான புகார் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதாதேவ், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன்கோகோய் தலைமையிலான அமர்வில் மனுஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்குவிசாரணையின் போது தேர்தல் ஆணையம்சார்பில் மோடி- அமித்ஷா தேர்தல் விதிமுறைகளை மீறவில்லை என பதில் மனு தாக்கல்செய்தது.இந்த நிலையில் பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் புகாரில் தேர்தல் ஆணையர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என தெரியவந்து உள்ளது.தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா இடையே கருத்து வேறுபாடுஏற்பட்டு உள்ளது. 

எனது கருத்தை அரோரா ஏற்காததால் ஆணையக் கூட்டங்களில் இனி பங்கேற்கப் போவதில்லை என  இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கடிதம் எழுதி உள்ளார்.அதில் பிரதமர் மோடி, அமித்ஷா தேர்தல்விதிமுறைகளை மீறி உள்ளனர். பிரதமர் மோடி அமித்ஷாவுக்கு எதிரான 6 தேர்தல் விதிமுறை மீறல்களில் எனது கருத்து ஏற்கப்படவில்லை. எனது கருத்துக்களை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏற்றுக்கொள்ளவில்லை. எனது கருத்துக்களை ஏற்று கொள்ளாததால் இனிவரும் தேர்தல் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவ தில்லை.“கமிஷனின் விவாதங்களில் எனது பங்குஅர்த்தமற்றதாகி விட்டது, ஏனெனில் எனது சிறுபான்மை முடிவுகள் எவ்வித பதிவும் செய்யப்படவில்லை என கூறி உள்ளார்.சிறுபான்மைத் தீர்மானங்களை பதிவு செய்வதன் அடிப்படையில் ஆணைக்குழு சட்டப்பூர்வமான செயல்பாட்டை மீளமைப் பதை இலக்காகக் கொண்ட மற்ற நடவடிக்கைகளுக்கு உதவி செய்வதை நான் கருத்தில் கொள்ளலாம்.பதிவுகளில் வெளிப்படைத்தன்மை தேவை மற்றும் சிறுபான்மை பார்வை உட்பட எல்லா முடிவுகளையும் வெளிப்படுத்தியதன் அடிப்படையில் என் பல்வேறு குறிப்புகளை கவனிக்காமல் போய்விட்டது, புகார்களைப் பற்றி கலந்துரையாடலில் கலந்து கொள்ளாமல் என்னை விலகி இருக்க நிர்ப்பந்திக் கப்பட்டேன்.

அரோரா கருத்து

இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறியதாவது;-தேர்தல் ஆணையத்தில் கருத்து மோதல்என்ற சர்ச்சை தேவையற்றது. முக்கிய விவகாரங்களில் தேர்தல் ஆணையர்கள் ஒரே மாதிரியான முடிவை எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கடந்த காலங்களிலும் இது போன்ற முரண்பாடான கருத்துக்கள் ஏற்பட்டு உள்ளன. ஒரு விவகாரம் குறித்து ஒவ்வொருவர் பார்வையில் வேறுவிதமான கருத்துக்கள் கடந்த காலங்களில் உருவாகி இருக்கின்றன.3 பேர் கொண்ட குழுவில் அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பது என்பது இயலாதஒன்று. எந்த புகார் குறித்த பொது விவாதத்திற்கும் நான் எப்போதும் தயார். தற்போதுதேர்தல் காலம் என்பதால் விவாதத்திற்கு நேரம்இல்லை என கூறியுள்ளார்.

;