tamilnadu

img

டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவின் வாழ்க்கை படமாகிறது

தில்லி 
இந்தியத் திரைத்துறையில் ஆக்சன், காதல் போன்ற பட பிரிவுகளின் வரிசையில்   விளையாட்டு தொடர்பான படங்களும் சாதனை படைப்பது வழக்கம். குறிப்பாக விளையாட்டு நட்சத்திரங்களின் வாழ்க்கை வரலாறு குறித்த படங்களும் வசூலில் சக்கை போடுவது வழக்கம் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளது. 

கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி ஆகியோரது வாழ்க்கை வரலாறு படங்கள் டாப் ஆர்டரில் ஜொலித்த நிலையில், இந்தியாவின் அதிரடி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா வாழ்க்கை வரலாறு குறித்து திரைப்படம் எடுக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படத்தை ரோனி ஸ்குருவாலா தயாரிக்க உள்ளார். சானியா மிர்சா வேடத்தில் நடிக்க முன்னணி நடிகையான கரீனா கபூரிடம் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. தனது வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த செய்தியைச் சானியா மிர்சா ஏற்கெனவே உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

;