புதுதில்லி, ஜுன் 15- திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக் கும் மத்திய அரசின் முடிவுக்கு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கேரள முதல் வர் பினராயி விஜயன் எதிர்ப்பு தெரி வித்தார். விமான நிலையத்தின் வளர்ச்சிக் கான திட்டத்துடன் மாநில அரசு பணி களை மேற்கொண்டுள்ள நிலையில் தனி யாரிடம் ஒப்படைப்பது மாநில அரசின் திட்டத்திற்கும் வளர்ச்சிக்கும் முரணா னது என பிரதமரிடம் முதல்வர் விளக்கி னார். நிதி ஆயோக் கூட்டத்தையொட்டி தில்லி சென்ற கேரள முதல்வர் பினராயி விஜயன், சனிக்கிழமை கேரளத்தின் தேவைகளை உட்படுத்தி விரிவான மனு வை பிரதமரிடம் ஒப்படைத்தார். பெரு வெள்ளம் தொடர்புடைய மாநில அரசின் நிதி தேவையை மத்திய அரசு நிறை வேற்றவில்லை எனவும், மாநிலத்தின் புனரமைப்புக்கும் புனர்வாழ்வுக்கும் மத்திய அரசின் உதவி தேவை எனவும் பிரதமரிடம் தெரிவித்தார். கேரள மாநி லம் மீண்டும் மழை பாதிப்பை எதிர் கொண்டு வருவதாகவும், தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சிக்கான முன்னு ரிமை பட்டியலில் இருந்து கேரள மாநி லத்தை விலக்கியது குறித்தும் பிரதம ரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி தொடர்பாக மத்திய தரைவழிப் போக்கு வரத்து அமைச்சர் நிதின் கட்கரியை முதல்வர் பினராயி விஜயனும், பொதுப் பணித்துறை அமைச்சர் ஜி.சுதாகரனும் பின்னர் சந்தித்துப் பேசினர்.