tamilnadu

img

ஐபிஎல் விதிமீறல்

12-வது சீசன் ஐபிஎல் தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் நடை பெற்று வருகிறது. விடுமுறை நாளான ஞாயிறன்று நடை பெற்ற 48-வது லீக் ஆட்டத்தில் மும்பை -  கொல்கத்தா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கொல்கத்தா அணி நிர்ணயித்த 232 ரன்களை துரத்திச் சென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா, கொல்கத்தாவின் இளம் பந்துவீச்சாளர் குர்னே வீசிய பந்தில் எல்.டபிள்.யூ முறையில் ஆட்டமிழந்தார். நடுவரின் முடிவை எதிர்த்து முறையிடப்பட்ட டிஆர்எஸ் முடிவும் எல்.டபிள்.யூ என்று கூறியதால் மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்தார்.டிஆர்எஸ் முறையும் கொல்கத்தா அணிக்குச் சாதகமாக அமைந்ததால் ரோஹித் சர்மா கள நடுவரிடம் கோபமாகப் பேசியதோடு மட்டுமல்லாமல் ஸ்டெம்பை பேட்டால் தட்டிவிட்டுச் சென்றார். ரோஹித் சர்மாவின் இந்த செயல்பாடு குறித்து கள நடுவர் ஐபிஎல் நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.புகாரின் பேரில் துரித நடவடிக்கையில் களமிறங்கிய ஐபிஎல் நிர்வாகம் ரோஹித் சர்மாவிடம் விசாரணை செய்தது.விசாரணையில் ரோஹித் சர்மா தனது தவறை ஒப்புக்கொண்டார். இதை யடுத்து ரோகித் சர்மாவுக்குப் போட்டி ஊதியத்திலிருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மேலும் கேப்டன் என்பதால் கவனமாகச் செயல்படுமாறும் கூறிய ஐபிஎல் நிர்வாகம், ரோஹித் சர்மாவை எச்சரித்து அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

;