பள்ளிக்கல்வியில் நிதி ஆயோக் ஆய்வில் தகவல்
புதுதில்லி, அக். 2- பள்ளிக்கல்வியில் நாட்டிலேயே கேரளம் முதலிடம் பெற்றுள்ளதாக மத்திய அரசின் நிதி ஆயோக் அறிவித்துள்ளது. 76.76 புள்ளிகளுடன் கேரளம் முன்னேற்றம் கண்டுள்ள நிலையில் 36.6 புள்ளிகளுடன் பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு 73.4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. உலக வங்கி பிரதிநிதிகள், கல்வியாளர்கள்கொண்ட குழு 2015-16, 2016-2017 ஆம் ஆண்டுகளை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி தயாரிக்கப்பட்ட 20 பெரிய மாநிலங்களின் பட்டியலில் கேரளம் முதலிடத்தை பிடித்துள்ளது. எட்டு சிறிய மாநிலங்களின் பட்டியலில் மணிப்பூரும் மத்திய ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் சண்டிகரும் முதலிடத்தில் உள்ளன. பொறுப்பு, நிதி மேலாண்மை, ஆசிரியர்கள் நியமனம், ஆசிரியர் மாண வர் வருகை, நவீன கல்வி போன்றவற்றில் 79 புள்ளிகளுடன் கேரளம் முதலிடம் பிடித்தது. இதில் 21 புள்ளிகளுடன் ஜார்க்கண்ட் மாநிலம் கடைசி இடத்தில் உள்ளது. துவக்க கல்வி முதல் மேல்நிலை கல்வி வரையிலான வகுப்புகளின் அடிப்படை வசதிகள், செயல்பாடு - கண்காணிப்பு ஆகிய பிரிவுகளில் 30 இனங்களின் அடிப்படை யில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.