மும்பை, ஜூன் 8- 2002ஆம் ஆண்டில் குஜ ராத் மாநிலத்தில் நிகழ்ந்த கல வரத்தின்போது பில்கிஸ் பானு கும்பல் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஐபிஎஸ் அதிகாரி ஓய்வு பெறு வதற்கு ஒரு நாள் முன்பு பணி நீக்கம் செய்யப்பட்டார். குஜராத் கலவரத்தில் ரன்திக்பூர் கிராமத்தைச் சேர்ந்த 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு (21) கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். அவரது 3 குழந்தைகள் கலவரத்தில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர் பான வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம், குற்றம்சாட்டப் பட்ட 5 போலீஸார், 2 மருத்து வர்கள் ஆகியோருக்கு கடந்த 2017-ஆம் ஆண்டில் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.இதனை எதிர்த்து 6 பேரின் மேல்முறையீடு மனு வையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனிடையே பில்கிஸ் பானுவுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு அளிக்க குஜராத் அரசு முன்வந்தது. இதை நிராகரித்த பானு, தனக்கு அதிகபட்சமாக ரூ.1 கோடி இழப்பீடு அளிக்க உத்தர விடக்கோரி உச்சநீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன் றத்தில் செவ்வாய்க்கிழமை யன்று நடைபெற்றது. அப்போது பில்கிஸ் பானு வசிக்க வீடு இன்றி மிகவும் கஷ்டமான நிலையில் வாழ்ந்து வருவது குறித்து நீதிபதிகளிடம் எடுத்துரைக் கப்பட்டது. இதைக்கேட்ட நீதி பதிகள், பில்கிஸ் பானுவுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலைவாய்ப்பு மற்றும் அவர் விரும்பும் பகுதியில் வீடு ஆகியவற்றை 2 வாரங்க ளுக்குள் அளிக்கும்படி குஜ ராத் அரசுக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கில் தொடர்பு டைய குஜராத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆர்.எஸ். பகோராவை ஓய்வு பெற ஒரு நாள் இருந்த நிலையில் மே மாதம் 30 ஆம் தேதி பணியில் இருந்து நீக்கம் செய்து மத்திய உள்நாட்டு விவகாரத் துறை அமைச்ச கம் நடவடிக்கை எடுத்துள் ளது. இதன் மூலம், பணியில் இருந்து ஓய்வு பெறும் போது கிடைக்கும் எந்த பலனையும் அவர் பெற முடியாது.