புதுச்சேரி,ஜூன் 10- புதுச்சேரி முன்னாள் முதல்வரும் திமுக மாநில ஒருங்கிணைப்பாள ருமான ஆர்.வி.ஜானகிராமன் உடல் நலக்குறைவால் திங்களன்று (ஜூன்10) அதிகாலை காலமானார். அவருக்கு வயது (78) . தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை அடுத்துள்ள ஆலத்தூர் கிராமத்தில் 1941 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி பிறந்தவர். முன்னாள் முதல்வர் திமுக தலைவர் மறைந்த கலைஞரின் ஈர்ப்பால் திமுகவில் இணைந்தார். திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினராக இருந்தவர் முன்னாள் முதல்வர் ஆர்.வி. ஜானகிராமன். 1996 முதல் 2000 ஆம் ஆண்டு வரை புதுச் சேரி முதல்வராக இருந்தவர். நெல்லித்தோப்பு தொகுதியிலிருந்து 5 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவராகவும் இருந்தவர். உடல் நலக்குறைவால் காலப்பட்டிலுள்ள பிம்ஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் அளிக்கா மல் காலமானார்.
முதல்வர்
ஆர்.வி.ஜானகிராமனின் உட லுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி, பேரவைத் தலைவர் சிவக் கொழுந்து, அமைச்சர் கந்தசாமி உட்பட சட்டப்பேரவை உறுப்பினர் கள், அரசு அதிகாரிகள் மலர் வளை யம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி,“ மறைந்த ஜானகிராமனின் உடல் புதுச்சேரி அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும். அரசு சார்பில் மூன்றுநாள் துக்கம் அனுசரிக்கப்படும்” என்றார்.
கே.பாலகிருஷ்ணன்
புதுச்சேரி ஆம்பூர் சாலையில் வைக்கப்பட்டிருந்த ஜானகிராமனின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன், புதுவை பிரதேச செயலாளர் ஆர். ராஜாங்கம், தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் வெ. பெருமாள், மூத்த தலைவர் தா. முருகன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதேபோல் திமுக அமைப்பா ளர்கள் சிவா,எம்.எல்.ஏ.,சிவக்குமார் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக சென்று அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர், செவ்வாய்கிழமை (ஜூன்11) காலை 9.30 மணிக்கு அவரது சொந்த ஊரான ஆலத்தூர் கிராமத்திற்கு கொண்டு சென்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. இறுதி நிகழ்ச்சியில் திமுக தலைவரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். ஜானகிராமன் மறைவையொட்டி புதுச்சேரி அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.