'கசடதபற' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் படக்குழு வெளியிட்டுள்ளனர்.
வெங்கட்பிரபு தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் ஆறு கதைகள், ஆறு இசையமைப்பாளர்கள், ஆறு ஒளிப்பதிவாளர்கள், ஆறு படத்தொகுப்பாளர்கள் பணிபுரியவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து அவர்களுடைய பெயர்களும் அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் இந்த படத்தில் ஹீரோக்களாக நடிக்கும் ஐந்து நடிகர்கள் மற்றும் ஹீரோயின்களாக நடிக்கும் 3 நடிகைகளின் பெயர்கள், தற்போது வெளிவந்துள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் இருந்து தெரிய வந்துள்ளது. இதன்படி இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், சந்தீப் கிஷான், சாந்தனு, வெங்கட்பிரபு மற்றும் பிரேம்ஜி ஆகியோர் நடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்தில் ரெஜினா, பிரியா பவானிசங்கர் மற்றும் விஜயலட்சுமி ஆகிய நடிகைகளும் நடிக்கவுள்ளனர்.