tamilnadu

img

பாசிசத்திற்கு அடிபணிய முடியாது

திரைப்பட விழாவில் கேரள முதல்வர் சூளுரை

திருவனந்தபுரம், டிச.14- பாசிஸ்ட் அணுகுமுறைகளுக்கு அடிபணியாமல் அதற்கு எதிராக நிமிர்ந்து நிற்போம் என கேரள முதல் வர் பினராயி விஜயன் சூளுரைத்தார். ஜனநாயகவிரோத செயல்பாடுகளுக்கு எதிராக பேசுகிறவர்களின் குரலை ஒடுக் கும் சூழ்நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளது. அத்தகைய சவால்களை பார்த்து எவரும் அமைதியாகிவிட மாட்டார்கள் எனவும் அவர் கூறினார். திருவனந்தபுரத்தில் நடந்துவந்த 24ஆவது உலக திரைப்பட விழாவின் நிறைவு விழா வெள்ளியன்று நடந்தது. அதில் சிறந்த திரைப்படங்களுக்கும் கலைஞர்களுக்கும் பரிசு வழங்கி கேரள முதல்வர் மேலும் பேசியதாவது:

1991இல் மக்கள் விரோத கொள்கை களுக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி குண்டு துளைத்தபோது அர்ஜண்டினியன் திரைப்பட இயக்கு நரான பெர்னாண்டோ சொளானஸ் கூறினார், ‘அர்ஜெண்டினா அடிபணி யாது, நான் வாய்மூடி இருக்கப் போவ துமில்லை’, என்று. கவுரி லங்கேஷ், நரேந்திர தபோல்கர், கல்புர்கி போன் றோர் கொல்லப்பட்ட நமது அரசியல் சூழ்நிலையில் நமக்கு சொளானஸ்-இன் வார்த்தைகள் ஊக்கமளிப்பதாகும். இந்தியாவில் சுதந்திரக்காற்றை சுவா சிக்கும் இடம் கேரளமாகும். பிர காஷ்ராஜ் போன்றவர்கள் அதனை தெரி வித்தும் உள்ளனர் என முதல்வர் கூறி னார்.

கேரளத்திற்கு வந்து விருது பெறு வதில் மிக்க மகிழ்ச்சி அடைவதாக சொளானஸ் கூறினார். கேரள திரைப்பட ரசிகர்களின் அன்பை பெறும் வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி கூறுவதாகவும் அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் கலாச் சாரத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன், சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர்.

;