tamilnadu

img

நாற்றாங்கால் தயார் நிலையில் இருந்தும் விவசாயத் தொழிலாளிக்கு லாபமில்லை

ஜுன் 12-ல் மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணைக்கு வந்தடைந்து 16-ஆம் தேதி கல்லணையிலிருந்து காவேரி, வெண்ணாறு, கல்லணை புதிய கட்டளை கால்வாய் ஆறுகளில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் விவசாயப்பணிகள் துவங்கி நாற்றாங்கால் தயார்நிலையில் உள்ளது. விவசாய பணிகள் ஜூலை மாதத்தில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாகும். அப்போது உழவு, களையெடுப்பு, கருதறுப்பு பணிகளில் இயந்திரத்தை பயன்படுத்தி வேலைகள் முடிக்கப்படும்.

விவசாயப் பணியில் நடவு வேலை மட்டும்பெண்கள் பார்த்து வந்தநிலையில் அதிலும் நடவு இயந்திரத்தை பயன்படுத்தினார்கள். கடந்த ஆண்டு தமிழக அரசு நடவு இயந்திரத்தை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ஏக்கர்1க்கு ரூபாய் 4000 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. சிறு குறு விவசாயிகள்கூட இயந்திரத்தை பயன்படுத்தும் நிலை உருவானது. இதனால் கிடைத்து வந்த குறைந்தபட்ச நடவுப் பணியிலிருந்து பெண்கள் வெளியேற்றப்பட்டனர். நவீன இயந்திரமயமானதால் 90% விவசாய வேலைகளில் மனித உழைப்பு நிராகரிக்கப்பட்டுவிட்டது. 

அரசு அறிவித்த மோச(டி)மான திட்டத்தால்டெல்டா மாவட்டங்கள் மட்டும் அல்லாது தமிழகம் முழுமையும் ஊக்கத்தொகை ரூபாய் 4000-ம் பெறுவதற்காக விவசாயிகள் நடவு இயந்திரத்தை பயன்படுத்தினார்கள். இதிலும் நிரம்ப மோசடிகள் நடந்துள்ளன. ஆனால்விவசாய தொழிலார்களுக்கு சட்டக்கூலிசுமார் 10 ஆண்டு காலமாக அறிவிக்கப்படாமலே காலம் கடத்தி வரும் போக்கு. ஒரு கண்ணில் வெண்ணெய்யும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் நிலையை பார்க்க முடிகிறது. 

நடப்பாண்டுக்கான உழவு, வரப்பு வெட்டுதல், நடவு, களையெடுப்பு பணிகளுக்கு இயந்திரங்கள் வாடைகைக்கு அரசு வேளாண்உழவடை கருவிநிலையமும், தனியார் நிலையங்களும் தயார் நிலையில் உள்ளது என வேளாண்துறை அறிவிப்பு செய்துள்ளது. இந்தஅறிவிப்புகளை பார்க்கும் போது விவசாயத்தொழிலாளர்கள் மேலும் கவலையில் ஆழ்ந் துள்ளார்கள். ஏற்கனவே அரைகுறையாக கிடைத்து வந்த விவசாய வேலை இனி வரும் காலங்களில் விவசாய தொழிலாளர்களுக்கு முற்றிலும் மறுக்கப்பட்டு விடுமே என்ற ஐயப்பாடு இருந்து வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பதற்கு முன் ஆறு,கிளைவாய்க்கால், பாய்கால், வடிகால் வாய்க்கால்களை தூர்வாரிட தமிழக அரசு பல்லாயிரம் கோடிரூபாய்கள் ஒதுக்கப்படும்.தூர்வாரும் பணிகள் மே மாதம் முழுமையும் ஆமைவேகத்தில் நடைபெறும். ஜீன் மாதம் மேட்டூர் அனை திறக்கப்பட்டு விட்டதும்.தூர்வாரும் பணிகள் மின்னல் வேகத்தில்பார்த்தும் பார்காமலும் வேலைகள் முடிக்கப் பட்டு விட்டதாக அறிவிக்கப்படும் வேடிக்கை என்னவெனில் ஆறு, கிளைவாய்க்கால் பாய்கால் வடிகால் வாய்க்கால்களில் தண்ணீர் செல்லும் நிலையில் தூர்வாரியதும் வாராததும் அறியமுடியாது. இந்நிலைமந்திரிமார்களுக்கும் பொதுப்பணித்துறைக் கும் வெளிச்சம். தூர்வாரும் பணியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக கிராமப்புற வேலை உறுதி சட்டத்தின் மூலம் நூறுநாள் வேலை பணியாளர்களை பயன்படுத்திட வேண்டும் என்றுமத்திய மாநில அரசுகள் உத்தரவு. அதன்பேரில்தான் தூர் வாரும், மராமத்து பணிகளில் நூறுநாள் வேலை ஆட்களை கொண்டு வேலைசெய்யப்பட்டது என்று ஆங்காங்கு வேலையின் மதிப்பீடு ரூபாய், வேலையில் எத்தனைஆட்கள் பயன்படுத்தப்பட்டது என எழுதப்பட்ட தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால்இது எப்படி தெரிகிறது என்றால் நெல்கதிர் அறுவடைக்கு அறுவடை இயந்திரத்தை பயன்படுத்தும் முன் வயலில் நான்கு வரப்புஓரம் உள்ள நெல்கதிர்களை அறுத்துப்போடஏக்கருக்கு ஒரு ஆளை  பயன்படுத்துவார்கள்.ஆனால் ஒரு ஏக்கர் நெல் கதிர்களை இயந்திரம்தான் அறுக்கும். அதுபோலதான் தூர்வாரும் பணியில் நூறுநாள் வேலையாட்களை பயன்படுத்தும் லட்சணம். இப்போக்கை பார்க்கும்போது பட்டுக்கோட்டை வரிகள் ஞாபகத்திற்கு வருது. ஊருக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்தில் தான் வெளிச்சம்போட்டு வாழ்ந்து விட்டார் ஊர்பணத்திலே என்பது போலதான் தூர்வாரும் பணியில் மனிதசக்தியை 100% திட்டமிடுவதும் அதைமண் ணோடு மண்ணாக புதைப்பதுமான மோசமான நடவடிக்கையை என்றைக்கு ஆளுகின்றஅரசுகள் நிறுத்தப் போகிறதோ அன்றுதான் ஏழைகள் வாழ்வில் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். 

வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதத்தை வழங்கிட விவசாய தொழிலாளர்களுக்கு தினக்கூலி 600 ரூபாய் அறிவிக்க வேண்டும், விவசாய தொழிலாளர் நலவாரியத்தின் மூலம் கல்வி, திருமணம், உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் ஆகியவை நிபந்தனை இன்றி வழங்க வேண்டும். விவசாயப் பணிகளில் நூறுசத மனிதசக்தியை பயன்படுத்த உத்திரவாதம் செய்திட வேண்டும். சாகுபடிக்கு லாயக்கான கோவில், மடம் பெயரில் உள்ள நிலம், மேய்க்கால் மந்தவெளி, காடு புறம்போக்கு நிலங்களை வகைமாற்றம் செய்து விவசாயத் தொழிலாளர்களுக்கு இலவசமாக நிலம் வழங்க வேண்டும். அனைவருக்கும் இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். சமூக பாகுபாடுகளை கலைந்து சமூக பாதுகாப்பு உத்திரவாதம் கொடுக்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு அடிப் படை தேவை பூர்த்தி அடைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமானால் விவசாய தொழிலாளர்கள் வேலைதேடி புலம்பெயரும் நிலையை தடுத்திட முடியும். விவசாயப் பணிகளுக்கு ஆள்பற்றாக்குறையை களைந்திடவும் கடந்த காலங்களைவிட பலமடங்கு விவசாயம் தீவிரமாகும்போது நாட்டில் உணவு தானிய பற்றாக்குறையை போக்கிட வாய்ப்புகள் உருவாக்கிடவும் வேலையின்றி வாழ்வாதாரத்தை இழந்துள்ள விவசாய தொழிலாளர் குடும்பங்களை பாதுகாத்திட தமிழக அரசு முன்வரவேண்டும்.

===க.அபிமன்னன்===

தஞ்சாவூர் மாவட்ட பொருளாளர் (அ.இ.வி.தொ.ச)

;