tamilnadu

img

நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்...  

சென்னை
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பெரும்பாலான நகைச்சுவை சார்ந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் வடிவேல் பாலாஜி. இவர் சின்னத்திரை நிகழ்ச்சியில் வைகை புயலும், மீம்ஸ் நாயகனுமான  வடிவேல் கெட்டப்புகளில் நடித்து அந்த நிகழ்ச்சியை தனி உயரத்துக்கு கொண்டு செல்பவர். இதனால் இவர் குறுகிய காலத்தில் பிரபலமடைந்து வெள்ளித்திரையிலும் காலடி வைத்தார். வெள்ளித்திரையில் இதுவரை 7 படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் பாலாஜிக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் இயல்பு நிலைக்கு திரும்பாமலேயே இன்று அவர் காலமானார். 45 வயதாகும் வடிவேல் பாலாஜியின் மறைவு திரைத்துறை நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வடிவேல் பாலாஜி நடித்துள்ள தமிழ் படங்கள்... 

1.என் ராசாவின் மனசிலே

2.காலம் மாறிப்போச்சு

3.வெற்றிகொடிக்கட்டு

4.தவசி

5.சந்திரமுகி

6.முனி

7.கோலமாவு கோகிலா 

;