tamilnadu

img

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை:
தமிழகத்தில் மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி (கடல் மட்டத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் உயரம் வரை) மற்றும் வெப்பச்சலனம் காரணமாகவும் ெமதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஏனைய உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.செப்.3 ஆம் தேதி வரை தென்கிழக்கு வங்ககடல், வடக்கு மகாராஷ்ட்ரா, வடகிழக்கு அரபிக்கடல், குஜராத் கடலோர பகுதிகள், தென்மேற்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

;