tamilnadu

img

கல்லூரி மாணவர்களிடையே மோதல் கூடாது

திருவனந்தபுரம், ஜுலை 14- திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரி யில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து முறையாக விசாரித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கேரள மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் தெரிவித்தார். மாணவர்களிடையே நடந்த மோதலில் கத்திக்குத்துடன் சிகிச்சை பெற்றுவரும் அகிலை மருத்துவமனையில் சந்தித்தபின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த ஒரு குற்றவாளியையும் பாதுகாக்காது. எங்க ளுக்கு எதிராக எதிர்க்கட்சி குற்றம்சாட்டுவது வழக்கமானதுதான். இங்கும் காவல்துறை யினர் விசாரணை நடத்த எவ்வித இடையூறும் இல்லை. எங்கு விசாரிக்க வேண்டும் என்பதை காவல்துறைதான் முடிவு செய்யும். விசார ணையை தடுக்கும் எந்த ஒரு செயலும் சிபிஎம் தரப்பிலிருந்து நடக்காது.  எஸ்எப்ஐ சுதந்திரமான ஒரு அமைப்பு. அதன் அடிப்படையில் அந்த அமைப்புதான் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். கட்சி என்கிற நிலையில் இத்தகைய பிரச்ச னைகளில் பொதுவாக தலையிடுவது இல்லை. எஸ்எப்ஐயில் சிபிஎம்மில் உள்ள வர்களும் அல்லாதவர்களும் செயல்படு கிறார்கள். எனவே கட்சி ஒருபோதும் தனது முடிவுகளை எஸ்எப்ஐ மீது திணிக்காது. அந்த அமைப்புக்கு சுதந்திரமாக முடி வெடுக்கும் திறன் உள்ளது. இப்போதும் இப்பிரச்சனையில் முடிவெடுத்துள்ளார்கள்.  இத்தகைய பிரச்சனைகளுக்காக கல்லூரி யை அங்கிருந்து இடம் மாற்ற வேண்டும் என்று அரசியல் எதிரிகள் குறிப்பாக யுடிஎப் நீண்ட காலமாக கூறி வருகிறது. பல பிரச்சனைகளை யும் கூறி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டும் வருகிறார்கள். மோதல் நடந்ததன் பேரில் கல்லூரியை இடம் மாற்றுவது சரியா? மட்டன்னூர் கல்லூரியில் கேஎஸ்யு தலை வராக இருந்த இதழ் ஆசிரியர் பஷீரை கேஎஸ்யு ஊழியர்கள் அடித்து கொன்றபோது கல்லூரியை அங்கிருந்து மாற்றவா செய் தார்கள். இத்தகைய சம்பவங்கள் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். அவ்வாறு நடக்காமல் இருப்பதற்கான முன்னெச்ச ரிக்கையும் தலையீடும் இருக்க வேண்டும் என கொடியேரி தெரிவித்தார். கட்சியின் அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ. பேபி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;