tamilnadu

img

யூனியன் பிரதேசமான பின் மேலும் மோசமான லடாக்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துடனிருந்த லடாக் பகுதி, தனியே யூனியன் பிரதேசமாக மாறி 11 மாதங்கள் கடந்தபின்னரும், தற்காலிக தங்குமிடங்களில் மிகக் குறைந்த ஊழியர்களுடன் யூனியன் பிரதேச நிர்வாகம் செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. புதிதாகஅரசிதழ் பதிவுபெற்ற அதிகாரிகள்நியமனம் மேற்கொள்ளப்படவில்லை, முறையான வங்கி இல்லை, தலைநகர் எது என்பதிலும் தகராறுடன் நிலைமைகள் நீடிக்கிறது.  சுமார் 9,800 அடி உயரத்தில் உள்ள இப்பீடபூமியில் தேசிய சுகாதார பணிக்குழு (National HealthMission) சார்பில் மருத்துவர் களைத் தேர்வு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, மாதம் 2 லட்சத்து50 ஆயிரம் ரூபாய் நிதித் தொகுப்புடன் மருத்துவர்கள் நியமனத்திற் காக விளம்பரம் செய்யப்பட்டு, நாட்டில் குஜராத், ராஜஸ்தான், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் மாநிலங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் விண்ணப்பித்திருந்தவர்களில் 110 பேர் தேர்வு செய்யப்பட்டனர். எனினும் இவர்களில் இதுவரை 15 பேர் மட்டுமே பணியில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

புதிய பணிநியமனங்கள் ஸ்தம்பிப்பு
ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இருப்பதுபோலவே, லடாக் யூனியன் பிரதேசத்திற்கும் பொதுத் தேர்வு ஆணையம் (PublicService Commission) தனியே அமைக்கப்பட வேண்டும் என்கிறகோரிக்கையை நிறைவேற்றுவதற்கு, யூனியன் பொதுத் தேர்வுஆணையம் தயக்கம் காட்டி வருகிறது. இதுவரையிலும் அரசிதழ்பதிவு பெற்ற அதிகாரி ஒருவர்கூடபணிநியமனம் செய்யப்படவில்லை.லடாக், யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டபின்னர், ஊழியர் பணியிடங்கள் காலியாக இருப்பது
சுமார் ஐயாயிரத்தை நெருங்கி இருக்கிறது.“லடாக்கிற்கு என்று தனியேபொதுத் தேர்வு ஆணையம் அவசியத் தேவையாகும். அப்போதுதான் இங்கேயுள்ளவர்கள் பணியில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்,” என்று கார்கிலில் உள்ளலடாக் சுயாட்சி மலை வளர்ச்சிக் கவுன்சில், தலைமை நிர்வாகக் கவுன்சிலர் ஃபெரோஷ் கான் கூறினார்.

ஜம்மு-காஷ்மீரிலிருந்து ஊழியர்கள்
கடந்த வாரம், ஜம்மு-காஷ்மீர்மாநில அரசாங்கத்தின் நிர்வாகத்திலிருந்து, மாற்றுப்பணி அடிப்படையில், 118 அலுவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்கள்.  இவர்கள் லடாக்கில் மிகவும் குறைவானஊழியர்களுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வித்துறை, பாசனத் துறை, வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை, நீர்ப்பாசனத் துறை,உயர் கல்வித்துறை ஆகியவற் றிற்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.  யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநரின் ஆலோசகர் உமாங் நருலா கடிதம் எழுதியதை அடுத்து இம்மாற்றல்கள் நடந்துள்ளன.

அந்தக் கடிதத்தில், “லடாக் யூனியன் பிரதேசம், பல்வேறு மட்டங்களிலும் ஊழியர் பற்றாக்குறையின் காரணமாக கடுமையான முறையில் பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கின்றன. சில இயக்ககங்களும், துறைகளும் தலைவர்கள் இல்லாமல் இருந்து வருகின்றன. இதுலடாக்கில் அரசுப் பணிகளை செயல் படுத்துவதில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.அதிகாரப்பூர்வ பதிவுருக்களின் படி, பல இயக்குநர்கள் ஐந்து துறைகளுக்குப் பொறுப்பு வகித்து வருகிறார்கள். பேரிடர்மேலாண்மை போன்று பல துறைகள் வெறுமனே தாள்களில்தான் காணப்படுகின்றன.லடாக் யூனியன் பிரதேசத்தை நிர்வகிப்பதற்கு, ஜம்மு-காஷ்மீரிலிருந்து ஊழியர்கள் இறக்குமதி செய்யப்படுவதற்கு எதிர்ப்பு இருந்து வருகிறது.‘லடாக்கில் படித்த, பயிற்சிபெற்ற இளைஞர்கள் ஏராளமானவர்கள் வேலையின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்குள்ளபணியிடங்களை நிரப்புவதற்கு அவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகொடுத்து, நியமனம் செய்வதற்குப் பதிலாக, அதிகாரிகள் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலிருந்து ஆட்களை மாற்றுப்பணியில் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்,” என்று சஜாத் கார்கிலி கூறினார். இவர் 2019 மக்களவைத் தேர்தலின்போது சுயேச்சை உறுப்பினராகப் போட்டியிட்டவர்.

வங்கியின் செயல்பாடுகளிலும் பிரச்சனை
சென்ற ஆண்டு அக்டோபரில் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டபின்னர், இரு யூனியன் பிரதேசங்களுக்கும் இடையே வங்கிகளிலிருந்த மின் விசிறிகள், சோபா செட்டுகள் முதலானவற்றைப் பிரித்துக் கொள்வதிலும்கூட சிக்கல்கள் ஏற்பட்டிருக் கின்றன.ஜம்மு-காஷ்மீர் வங்கி, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு அதிகாரப்பூர்வ வங்கியாகத் தொடரும் அதே சமயத்தில், புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் குடியேற்றச்சட்டம் வெளியார்களை வேலைக்கு எடுத்துக்கொள்ள தடை விதிக்கிறது. வெளியார் என்ற வரையறையில் இப்போது லடாக் பகுதியைச் சேர்ந்தவர்களும் வந்துவிடுகிறார்கள். இப்போதும் லடாக் பகுதியில் ஜம்மு-காஷ்மீர் வங்கியின் சார்பில்சுமார் இரண்டு டஜன் கிளைகள்செயல்பட்டுக் கொண்டிருக்கின் றன. இவை லே மற்றும் கார்கில்போன்று மிகவும் உயரத்தில் உள்ளஇடங்களில் இயங்கிக்கொண்டிருக்கின்றன.ஜம்மு-காஷ்மீர் வங்கி சமீபத்தில் பணியிடங்கள் நிரப்புவதற்காக வெளியிட்டிருந்த விளம்பரத்தில் லடாக் பகுதியினர் விண்ணப்பித்திட தடை விதித்திருக்கிறது. எனவே, இப்போது லடாக் பகுதியிலும், இதேபோன்று லடாக் குடியேற்றச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

(கட்டுரையாளர்: பீர்சாதா அசிக், ஜம்மு-காஷ்மீர் பகுதி செய்தியாளர், தி இந்து நாளிதழ்)

;