tamilnadu

img

ஆசிய தடகள போட்டியில் இந்தியாவின் டூடி சந்த் புதிய சாதனை

இன்று ஆசிய தடகள போட்டியில் இந்தியாவின் ஓட்டப்பந்தய வீராங்கனை டூடி சந்த் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் புதிய சாதனையை படைத்துள்ளார்.


23வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் துவங்கியுள்ளது. இன்று நடந்த 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தின் அரையிறுதியில் இந்திய தடகள வீராங்கனை டூடி சந்த்100 மீட்டர் ஓட்டத்தை 11.28 நொடிகளில் கடந்து முந்தைய தேசிய சாதனையை முறியடித்துள்ளார். கடந்த ஆண்டு அசாம் மாநிலம் கௌஹாத்தியில் நடந்த 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் 11.29 நொடிகளில் டூடி சந்த் கடந்தது தேசிய சாதனையாக பதிவாகியிருந்தது தற்போது அவராலேயே முறியடிக்கப்பட்டுள்ளது.


;