தஞ்சாவூர், அக்.19- கும்பகோணம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்ட விவசாயக் கூலித் தொழி லாளி, மருத்துவரின் அலட்சியம் காரண மாக உயிரிழந்தார். அவரது குடும்பத் துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். உயி ரிழப்புக்கு காரணமான மருத்துவர், செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக, நீலப்புலி கள் இயக்கம் உள்ளிட்ட கட்சிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். தஞ்சாவூர் மாவட்டம், திருவிடை மருதூர் அருகே உள்ள நெய்வாசல் காலனி தெருவைச் சேர்ந்தவர் வீரப்பன் (50) விவசாயக் கூலித் தொழிலாளி. இவ ருக்கு தையல்நாயகி என்ற மனைவியும், அழகிரி(22) விக்னேஷ் (20)என்ற மகன்க ளும், தமயந்தி (25) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று கும்பகோணம் அரசு மருத்துவ மனைக்கு வீரப்பன் தனது மனைவி யுடன் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அவருக்கு மூளையில் ஸ்ட்ரோக் கோளாறு இருப்பதாக டாக்டர் கூறி யுள்ளார். இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், நோயின் அவசரத்தை கணக்கில் கொண்டு, (ஐசியு வார்டில்) அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்காமல், சாதாரண வார்டில் அனுமதித்து வீரப்பனுக்கு குளுகோஸ் செலுத்தி உள்ளனர். இந்நிலையில் ஜன்னி ஏற்பட்ட வீரப்பன் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து பதறிப்போன அவரது மனைவி அங்கு இருந்த செவிலியரிடம் கூறியும், அவர் எதையும் கண்டு கொள்ள வில்லை என கூறப்படுகிறது. சிகிச்சை அளிக்க மருத்துவரும் இல்லையாம். இந்நிலையில் வீரப்பன் உயிரிழந்து விட்டார். இதையடுத்து அவரது உறவினர்கள் திரண்டு பணி மருத்துவர் மீதும் செவிலியர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை அன்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவலறிந்து அங்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சந்தித்து இது குறித்து கேட்டறிந்தனர். அப்பொழுது அங்கு வந்த கும்பகோணம் டிஎஸ்பி, வட்டாட்சியர் ஆகியோர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் வருவாய் கோட்டாட்சியர், நிலைய தலைமை மருத்துவ அலுவலர், சுகாதா ரத்துறை இணை இயக்குனர் ஆகி யோர் நேரில் வர வேண்டும். அது வரை உடலைப் பெற்றுக் கொள்ள மாட்டோம்” என வலியுறுத்தினர். இதே காரணத்தை வலியுறுத்தி சனிக்கிழமை அன்றும் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து அங்கு வந்த வருவாய் கோட்டாட்சியர், டிஎஸ்பி, வட்டாட்சியர் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகளிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், “இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ 10 லட்சம் வழங்க வேண்டும். பணியில் அலட்சியமாக செயல்பட்ட பணி மருத்துவர் மற்றும் செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். போதியளவு மருத்துவர், செவிலியர் நியமிக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது. அதிகாரிகள் தரப்பில்,” இறந்தவர் குடும்பத்திற்கு உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் நிதி உதவி 10 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு வேலை வழங்குவது குறித்து, அரசு விதிகளின்படி இடம் இருப்பின் விதிகளுக்குட்பட்டு பரிந்துரை செய்யப்படும். இறப்புக்கு காரணமாகக் கூறப்படும் மருத்துவர் மீது இணை இயக்குனர் தலைமையில் விசாரணை குழு நியமனம் செய்து விசாரணை அறிக்கையை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இனிவரும் காலங்களில் வார்டுகளில் கூடுதலாக சிகிச்சைக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்க பரிந்துரை செய்யப்படும். மருத்துவ சிகிச்சைக்கு ஒப்பந்த தொழி லாளர்களை ஈடுபடுத்த மாட்டோம். முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் பெற்றிட உரிய முன்மொழிவுகள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அறிக்கையாக அனுப்பப்படும்” என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இறந்தவரின் சடலம் உடல்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டது. போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சின்னை.பாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினர் சி.நாகரா ஜன், திருப்பனந்தாள் ஒன்றிய செயலா ளர் பி.சாமிக்கண்ணு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒன்றிய செயலா ளர் டி.செல்வமணி, சிபிஎம் நகரச் செய லாளர் கே.செந்தில்குமார், ஓய்வூதியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் பழ.அன்புமணி, விடுதலை சிறுத்தை கள் கட்சி மாவட்ட செயலாளர் க.தமிழ ருவி, மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் பாலு, விசிக விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம் க.பாலகுரு, விவசாயிகள் தொழிலாளர்கள் விடுதலை முன்னணி மாநிலத் துணைச் செயலாளர் சி.நாகப்பன், விசிக அமைப்பாளர் திராவிட நாத்திகன், வழக்கறிஞர் ஏ.சி.பி.லெனின், நீலப் புலிகள் இயக்க மாநில தலைவர் ஆ. இளங்கோவன் ஆகியோர் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர்.