tamilnadu

img

நலத்திட்ட உதவி வழங்கும் விழா

தஞ்சாவூர் அக்.4- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தலைமை வகித்து, தங்கக்காசு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சடையப்பன் வரவேற்றார்.  நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ராஜேஸ்வரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.திருஞானசம்பந்தம், முன்னாள் மாநில கயிறு வாரியத் தலைவர் எஸ்.நீலகண்டன், ஒன்றியச் செயலாளர்கள் பேராவூரணி உ.துரைமாணிக்கம், சேதுபாவாசத்திரம் நாடியம் சிவ.மதிவாணன், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் ஆர்.பி.ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வேந்திரன், சமூக நல விரிவாக்க அலுவலர் இளவரசி, ஊர்நல அலுவலர் விஜயா, அட்மா தலைவர் எஸ்.வி.பி.ரவிசங்கர், கொன்றை கணேசன், மாவை மதி, பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில், முதற்கட்டமாக சுமார் 25 பேருக்கு தலா 8 பவுன் தங்கக்காசு வழங்கப்பட்டது.