தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியம் திமுக பொறுப்பாளர் கூகூர் கோபாலகிருஷ்ணன் மகள் கோ.ரேகா, வாழ்குடி முருகன் ராஜகுமாரி மகன் கார்த்திகேயன் ஆகியோர்களின் திருமண வரவேற்பு விழா கூகூரில் ஜெயா இல்லத்தில் நடைபெற்றது. விழாவில் திமுக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சு.கல்யாணசுந்தரம், மாநில தேர்தல் பணிக் குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் கோவி.செழியன், தலைமை செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சுந்தர ஜெயபால், மாவட்ட பிரதிநிதி கலியமூர்த்தி, மாத்தூர் ஜெயக்குமார், புருஷோத்தமன் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.