tamilnadu

img

தஞ்சாவூரில் விதொச பயிற்சி வகுப்பு

தஞ்சாவூர், மே 20-அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்பு தஞ்சாவூரில் சனிக் கிழமை நடைபெற்றது. பயிற்சி வகுப்பிற்கு மாநிலக்குழு உறுப்பினர் சி.நாகராஜன் தலைமை வகித்தார். ‘சங்க வளர்ச்சியும் நமது பணிகளும்’ என்ற தலைப்பில் மாநிலச் செயலாளர் எம்.சின்னத்துரை, ‘நூறு நாள் வேலைத் திட்டம்’ என்ற தலைப்பில் மாநில பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம், ‘நலத்திட்டங்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம்’ என்ற தலைப்பில்மாவட்டத் தலைவர் ஆர்.வாசு, ‘எதிர் காலக் கடமைகள்’ என்ற தலைப்பில் மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி ஆகியோர் கருத்துரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், வி.தொ.ச நிர்வாகிகள் கே.அபிமன்னன், எம்.சம்சுதீன், ஆர்.உமாபதி, இடைக்கமிட்டி நிர்வாகிகள், முன்னணிஊழியர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.